Friday 10 August 2012

நிலையாமை





  “இவன் பிறப்பதுமில்லைஎக்காலத்திலும் இறப்பதுமில்லைஇவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லைஇவன் பிறப்பற்றான்அனவரதன்பழையோன்உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்” 



- பாரதி மொழி பெயர்த்த கீதை வாக்கியம்




 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை  உடைத்து இவ் வுலகு


எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை



இந்த வாரம் மிக சோகமாகவே ஆரம்பித்தது... 
நெருங்கிய ஒரு சிலரின் மறைவு செய்திகள் 
மிகவும் பாதித்தது.. 

நேற்றுகூட எனது மூணாம் வகுப்புத் தோழர்களை 
எண்ணும்போது எத்தனை பேர் இன்னும் இருக்கிறார்கள் 
என்ற சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது.. 

வயதாக, வயதாக இழப்புகளைச் சந்திக்கவும்,
அவற்றைத்  தாங்கிக்   கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

மரணம் பற்றி சுஜாதா எழுதியவைகளிளிருந்து..

மிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறதுதினம் தினம் பல பேர் இறக்கிறார்கள்அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.

மரணம்கடவுளுக்கு வாசல்என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார்

மனிதனால் இதுவரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம்அதை அவன் இன்னமும் கொச்சைப்படுத்தவில்லைகொச்சைப்படுத்தவும் முடியாதுஅது துல்லியமானதுஅதை அவனால் அறியவே முடியாதுஅதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்றமுடியாதுஅது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறதுஉங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும்போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறதுஆம், வாழ்வு அர்த்தமற்றதுதான்ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்.  

"சாவுங்கறதே ஒரு முடிவு இல்லைஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்குஒவ்வொரு இருபத்துநாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்குமுப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம்கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம்அதனால நாம எப்போ சாகறோம்எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாதுபிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்…”
அதனால…?”
இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை..”
எப்படி ?”
நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !”

3 comments:

  1. Powerful words to hang on to and live by:

    "Live Life".

    “நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !”

    ReplyDelete
  2. life is so unfair!!!!!
    how much loss can a person handle...?!?!?!?!?!?!

    ReplyDelete
    Replies
    1. நாம் எல்லோருமே வாழ்வின் ஒரு காலகட்டத்தில் இந்த கேள்விகளைக் கேட்கிறோம்...காலம்தான் பதில் சொல்லும்..
      அதுவரை இப்படித்தான் புலம்ப வேண்டும்..

      "இரண்டு வரம் வேண்டும்
      இறைவனிடம் கேட்பேன்
      நினைத்து வாட ஒன்று
      மறந்து வாழ ஒன்று "


      "இன்பத்தில் துன்பம்,
      துன்பத்தில் இன்பம்
      இறைவன் வகுத்த நியதி.."

      Delete