Tuesday 21 August 2012

பிஸியோ பிஸி!


இந்த வாரம் ரொம்ப பிஸியா இருக்கும் போல... 

19 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சியில் மகரிஷி பிறந்ததினம்மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து எங்கள் வளர்ப்பு மகன் ராஜ் திருமணத்திற்காக கடலூர் சென்று நேற்று திருமண நிகழ்ச்சி முடிந்து மயிலாடுதுறை வந்து அக்காவை சந்தித்துவிட்டு    இரவு திருச்சி திரும்பினோம்

இன்றிரவு ஆபீஸ் வேலையா பெங்களூர் போகிறேன்..

மாலாவுக்கும் நிறைய வேலை..
BHEL ல் இன்றிலிருந்து Yoga for Stress Management    course எடுக்கிறாள்.
பிறகு மண்டலச் சுற்றுப் பயணம். 

உருப்படியாக  ஏதாவது post பண்ண முயற்சிக்கிறேன்!



 ஏன்   இந்தியா  பிரச்சனையிலே  இருக்கு...

மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
1 கோடி IT ஆளுங்க
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
11  கோடி 5 வயசுக்கும் கீழானவர்கள்
15 கோடி வேலை தேடுவோர்
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்
மிச்சம் இருப்பது நீங்களும் நானும்
நீங்க எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/blog படிக்கிறதுல பிஸி...

அய்யோ...   பிஸியோ பிஸியான  நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?! 

1 comment:

  1. அப்படிச் சொல்லுங்க... என்னையும் சேர்த்துக்குங்கோ...

    தகவலுக்கு (புள்ளிவிபரங்கள்) நன்றி...

    ReplyDelete