Tuesday 5 February 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 2




 உயிரை உணர்வோம் 



அம்மா கேட்கின்றார்கள் - " என் இனிய மாணவச் செல்வங்களே! நீங்கள் எங்கே, எப்படி சாமி கும்பிடுவீர்கள்?"

மாணவிகள் பதில் சொல்கின்றனர் -

" நான் வீட்டிலே சாமி படத்துக்கு முன்னாடி நின்று 


தாத்தா 
சொல்லிக் கொடுத்த ஸ்லோகத்தை சொல்லுவேன்."


" நான் வெள்ளிகிழமை தோறும் கோவிலுக்குச் சென்று எல்லா சாமிகளுக்கும் சரணம் பண்ணி வணங்கி பிரஹாரத்தை மூன்று முறை சுற்றி வருவேன்."

" நான் வீட்டிலேயும், சமயம் கிடைக்கும்போது பள்ளிவாசலுக்கும் சென்று தொழுவேன்"


" நான் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை பண்ணுவேன்"

ஒரு மாணவி சொல்கிறாள் - " எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நான் இப்படி எல்லாம் எதுவும் 
செய்வதில்லை."


உடனே மற்ற மாணவிகள் " பரீட்சை வரும்போது இவளை இந்த மாதிரி சொல்ல முடியுமா என்று  கேளுங்கள்" என கிண்டல் செய்கின்றனர்.

அம்மா பேசுகின்றார்கள் - " உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கின்றது. பெரும்பாலும் நீங்கள் சார்ந்துள்ள மதத்தின் நெறிமுறைகள்படி, பழக்க வழக்கங்கள்படி, வணக்கமுறைகள்படி இறைவனை வணங்குகிறீர்கள்.

உலகத்தில் ஆயிரக்கணக்கான மதங்கள் உள்ளன. அதில் எட்டு மதங்கள் அதிக மக்களால் பின்பற்றப்படுகின்றன. அவை கிறிஸ்துவம், இஸ்லாம், ஹிநது , புத்தம், சைனாவில் தாவொஇசம், ஷிண்டோ, ஜூடாயிசம் போன்றவையாகும்.பெரும்பாலான மதங்கள்  
இறைவன் என்ற பேராற்றலை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை  வழிபடுகின்றன. 
சில மதங்கள் இறைவனைப் பற்றி பேசுவதே இல்லை. நீங்கள் எல்லோரும் இறைவனை 
நம்புவார்களாக இருப்பதால் நான் இப்போது சொல்கின்றேன் -

நீங்கள் உண்மையில் சாமியை கும்பிடுவதில்லை!"




எல்லா மாணவிகளும் இதை மறுக்கின்றனர்.



அம்மா சொல்கிறார்கள் - 
 
" நீங்கள் உண்மையில் சாமி கும்பிடுவதாக இருந்தால் கோவிலில் நீங்கள் இறைவனைப் பற்றி அல்லவா சிந்தித்துக் ண்டிருக்கவேண்டும்? 

பிள்ளையாரப்பா! நீ நல்லாயிருக்கியா...உன் தம்பி எப்படியிருக்கார் ? உன் மூஷிக வாகனம் சௌக்கியமா? இப்படியா அங்கு நினைக்கிறோம்? கோவிலில் சந்நிதியில் கடவுளைப் பார்க்காமல் கண்களை  மூடிக்கொண்டு 
நான் நல்லாயிருக்கணும் , ஃபர்ஸ்ட்  மார்க் வாங்கணும். இப்படித்தானே வேண்டிக் கொள்கிறோம்? சரிதானே!" 



மாணவிகள் தலையாட்டுகின்றனர்.

அம்மா தொடருகின்றார்கள் - " நாம் கோவிலுக்கு போனாலும் சரி, சர்ச்சுக்குப் போனாலும் சரி, மசூதிக்குப் போனாலும் சரி அங்கு நாம் நம் மனதில் உள்ள தேவைகளை இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறோம். அதாவது நம் மனதில் உள்ள எண்ணங்களை அங்கு நினைத்துக் கொள்கிறோம். எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?"

" மனதிலிருந்து " என பதிலளிக்கின்றனர் மாணவிகள்.

" சரியாகச் சொன்னீர்கள். மனம் எங்கிருக்கிறது அதாவது மனதின் அடிப்படை எது?"

மாணவிகளுக்கு விடை தெரியாமல்  குழம்புகின்றனர்.

அம்மா விளக்குகின்றார்கள் - " நம் உடலில் ஓடும் உயிர்தான் மனமாக விரிகின்றது. உயிரும் மனமும் ஒன்றுதான். 
இறந்தவர் ஒருவர் உடலில் மனம்தான் இயங்குமா? உயிர் எப்போது பிரிகின்றதோ அப்போதே மனமும் பிரிந்து விடுகின்றது. ஒரு தீபம் எரியும்போது வெளிச்சம் இருப்பதுபோல உயிர் இயங்கும்போதுதான் மனமும் இயங்கும். புரிகின்றதா? நாம் எங்கு சாமி கும்பிட்டாலும் நம் மனதில் எழும் எண்ணங்களையே வணங்குகின்றோம். 
மனமோ உயிரின் வெளிப்பாடு.  நாம் கடவுளை வணங்கும்போது உண்மையில் நம் உயிரைத்தான்  வணங்குகின்றோம். 




சரி, நம் உடலில் ஓடும் உயிர் எங்கு இருக்கின்றது? எப்படி செயல் படுகின்றது?"

மாணவிகள் விழிக்கிறனர்.

" இது எப்படி இருக்கிறது என்றால் என்னிடம் லட்சம் ரூபாய் இருக்கிறது. ஆனால் எங்கிருக்கிறது என்பது தெரியாது. எனவே மாணவிகளே!  கடவுள் வணக்கம் என்ற பெயரிலே நாம் நம் எண்ணத்தை , அது எழும் மனத்தை, மனதின் அடிப்படையான உயிரைத்தான் வணங்குகிறோம் என்பதை  புரிந்து கொண்டீர்கள் அல்லவா!  அந்த உயிரை உணர வேண்டாமா?"

மாணவிகள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

" உயிரை உணர்வதற்கு முன் இதுவரை நான் சொன்ன விஷயங்களில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். 

கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க!"

                                                                                               -  தொடரும் 



உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம். - கவிஞர் வாலி 



கடவுளை வணங்கும் போது, கருத்தினை உற்றுப் பார் நீ !
கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் ஆங்கே!

                                                             - அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி 



                                                           

4 comments:

  1. power of thoughts!!!

    no Qs this time as it was in simple tamil or maybe i'm getting better at tamil by reading your posts :)

    ReplyDelete
  2. actually i do have a Q...but i'll wait until the next lesson...

    ReplyDelete
  3. Is Soul = Consciousness = உயிர் = மனம் ???

    ReplyDelete
    Replies
    1. ஆம்,

      அலையும்போது மனம்

      அடங்கி நிலைக்கும்போது அறிவு ( Consciousness )

      Delete