Friday 15 February 2013

மாலா முந்நூறு


என்னுடைய இந்த ஐநூறாவது postஐ  மாலாவுக்கு dedicate  பண்ணுகிறேன்.

மாலாவிற்கென ஏற்படுத்தப் பட்ட இந்த blog ல் மாலா பற்றி நிறைய எழுதாதது பற்றி கேட்டவர்களுக்காக இந்த ஆண்டு ( from Jan 13) இவள்  பங்கெடுத்துக் கொண்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு சில போட்டோக்கள்   

@ புதுக்கோட்டை 
@ இரூர் 

@ துறையூர் 
@ துறையூர் 
@ சமயபுரம் 


சமத்துவ பொங்கல் @ வெள்ளாறு, புதுக்கோட்டை 
@ ஆலங்குடி 


இரண்டு வருடத்திற்கு முன் மாலா முந்நூறு காவியமென எழுத ஆரம்பித்து அது மாலா மூவாயிரம் என நீண்டுகொண்டே போகின்றது. 

ஸ்ரீராம் blogல் எழுதியது கீழே-

மாலா முந்நூறு

"பிறந்த நாளுக்கென்ன வேண்டும்?"
பிரிய மனைவியிடம் கேட்டேன்.
"முப்பது வருடங்களுக்கு முன்னே 
மாதம் முப்பது எழுதினீரே -
கவிதை என்ற பேரில் கடிதங்கள்!
இப்போ இரண்டு எழுத முடியுமா?" என்றாள்.

இல்லாள் இவள் பெருமை  எல்லாம் சொல்ல 
இனிய கவிதைகள் இரண்டு போதாதே -
இதோ " மாலா முந்நூறு " காவியம் 
எழுதத் தொடங்கிவிட்டேன்  -

தினம் ஒன்றாய் துணைவியின் 
மணம் வீசும் மங்கள குணங்களை 
எண்ணி எண்ணி எழுதிட
எந்தையே என்க்குதவிடுவாய் ! 

 Net practice

அன்புள்ளம் கொண்ட அழகி
ஆசைகள் குறைவு
இன்முகம் இனிய பேச்சு
ஈடில்லா சிரிப்பு
உள்ளம் கவர் கள்ளி
ஊர் போற்றும் உத்தமி
என் விருப்பம் ஏற்று
ஏற்றம் பெற எல்லாருக்கும்
ஐஸ்வர்யம் கிடைத்திட 
ஒருநாள் தவறாமல்
ஓய்வின்றி ஊருக்கெல்லாம் மகரிஷி
ஔடதம் அளித்திடுவாள்  -
அஃதே மாலாவின் மகத்துவம்!

காப்பு

செவியினிக்க செஞ்சொற்களால் செகத்தீரை சிறந்த
ஓவியங்களாய் தீட்டும் மாலாவை - காவியமாய்
பாடிடத் துணிந்திட்ட  பாவியென் மேல்
அடி விழாமல் ஆசி வழங்கு ஆனைமுகனே!

இதில் மாலாவின் விசில் அடிக்கும் திறமைக்கென பத்து பாடல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது பற்றி தனி post விரைவில் ....

3 comments:

  1. Vazhga Valamudan!

    Congratulations Uncle!

    "மாலா(aunty) முந்நூறு" --super!

    ReplyDelete
  2. Congrats Chithapa, Chithi visil video please :-)

    ReplyDelete
  3. Congrats on 500th post!
    தீட்டும் மாலாவா??? திட்டும் மாலா வா ???? :)

    ReplyDelete