Friday, 8 February 2013

சிரிப்பு ஞானம் - 26

சர்தார் தன்னுடைய காரை விற்க நினைத்து போனார்,ஆனாலும் அவருடைய கார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் அதை வாங்க யாரும் வரவில்லை,இதை பார்த்த அவருடைய மதராசி நண்பர்,அவரிடம் ஒரு மெக்கானிக் அட்ரசை கொடுத்து அங்கே போனால் அவர் காரின் மீட்டரை முப்பது ஆயிரம் கிலோமீட்டர் ஓடியது போல் செய்து விடுவார் அப்புறம் நீங்கள் விக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்...

கொஞ்சம் நாள் கழித்து அந்த மதராசி நண்பர் நம் சர்தாரை மீண்டும் அதே காரில் கண்டு ஆச்சர்ய பட்டு சர்தாரிடம் ஏன் விக்கவில்லை என்று கேட்டார்,அதற்கு சர்தார் சொன்னார்,

"யோவ் உனக்கு என்ன பைத்தியமா ,என் கார் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது அதை போய் விற்பதாவது"என்ற படி சென்றுவிட்டார்




CAR  THAT  RUNS  ON  GRASS!



ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..
 " மாமியாரின் அன்புப்பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..
" மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

1 comment:

  1. hellllloooooooooooo....women are not that bad drivers!!!!!!!! :)

    ReplyDelete