" உயிரைப் பற்றித் தெளிவாக தெரிந்து கொண்டால்தான் உயிரை நல்ல முறையில் உணர முடியும். எனவே மாணவச் செல்வங்களே, இன்னும் ஒரு சில விஷயங்களைத் தெரிந்துகொண்டு பிறகு உயிரைப் பற்றி ஆராய்வோம். முதலில் நம் உடலைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.." என்கிறார்கள் அம்மா.
" நம் உடம்பு எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் ரத்தத்திலானது.
இதயம், நுரையீரல்,குடல் போன்ற உள் உறுப்புகளாலானது...." என்று சொல்லிக்கொண்டே போகின்றார்கள் மாணவிகள்.
" நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். இப்படிப்பட்ட உடலில்தான் நம் உயிர் இயங்குகின்றது. நமது முன்னோர்கள் இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் எல்லா தோற்றங்களும் பஞ்சபூதங்களின் கூட்டு என்றார்கள். அப்படியெனில் நமது உடலும் பஞ்சபூதங்களால் ஆனதுதானே. பஞ்சபூதங்கள் என்னென்ன சொல்லுங்கள்.." என கேட்கிறார்கள் அம்மா.
"நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் " - உடனே பதில் வருகின்றது மாணவிகளிடமிருந்து.
" இந்த பஞ்சபூதங்களைப் பற்றி பாடங்கள் படித்திருக்கின்றீர்களா?" -அம்மா.
மாணவிகள் 'இல்லை' என்கின்றார்கள்.
" சரி, பூதம் என்றால் என்ன?" எனக் கேட்கின்றார்கள் அம்மா.
மாணவிகள் ஆர்வத்துடன் பதில் சொல்கின்றனர் -
" TV சீரியல்ல பார்த்திருக்கேன்."
" கண்ணு பெருசா, பல்லெல்லாம் நீட்டிக்கிட்டு பாக்க பயங்கரமா இருக்கும்."
"அல்லாவுதீன் பூதம் அப்படி பயங்கரமா இருக்காது."
"சிவன் கோவில் மதில் மேலே சங்கு வச்சுகிட்டு பூத பொம்மை பார்த்திருக்கேன்"
அம்மா சிரித்துக்கொண்டே ஆரம்பிகின்றார்கள் - " நீங்கள் Physics என்ற இயற்பியல் பாடங்களில் கெட்டிப்பொருள், திரவப்பொருள், வாயுபொருள் மற்றும் வெப்பம் பற்றியெல்லாம் படித்திருக்கின்றீர்கள் அல்லவா! Physics பாடத்தை முன்பு பௌதீகம் என்று அழைத்தார்கள். பௌதம் என்றால் state அல்லது நிலை. இந்த பௌதம் என்ற வார்த்தைதான் பூதம் என்றாகிவிட்டது. பஞ்சபூதங்களில் நிலம் என்பதைத்தான் solid state அல்லது கெட்டிப்பொருள் என படிக்கின்றோம். நீரை திரவங்கள் என்ற பெயரிலும், காற்றை வாயுப்பொருட்களாகவும் மற்றும் நெருப்பை வெப்பமாகவும் படிக்கின்றோம். எனவே பஞ்சபூதங்களைப் பற்றி தெளி வாகவே படிக்கின்றோம்."
" ஆகாயத்தை விட்டுவிட்டீர்களே!" - மாணவிகள் மடக்குகின்றனர்.
" பாராட்டுக்கள். மிகவும் விழிப்பாக இருக்கின்றீர்கள். ஆகாயத்தை நீங்கள் மேலே இருக்கும் வானம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இது தவறு.ஆகாஷ் என்ற சொல் ஆகாயமானதால் வந்த குழப்பம். விண் என்ற சொல்லை நாம் பயன் படுத்துவோம். விண்வெளி என்று எதனைக் குறிப்பிடுவோம்?" என அம்மா கேட்கின்றார்கள்.
" பூமிக்கு மேலே இருப்பதெல்லாம் விண்வெளிதான் " என்கிறார்கள் மாணவிகள்.
" சரியாகச் சொல்கின்றீர்கள். பூமிக்கு மேலே செல்ல செல்ல காற்று மண்டலம் அடர்த்தி குறைந்து பிறகு விண்கள் மாத்திரம் உள்ள வெளி(space )க்கு செல்கிறோம். இந்த விண்களும் இல்லாத வெளி "சுத்த வெளி" என அழைக்கப் படும். இந்த விண்ணைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்." என சொன்ன அம்மா மேலும் தொடர்கின்றார்கள்.
" நமது உடலும் பஞ்சபூத கூட்டு எனச் சொன்னேன், நமது உடலில் உள்ள எலும்பு போன்ற கெட்டிப்பொருள்கள் நில தத்துவத்திற்கும், உடலில் ஓடும் ரத்தம் நீருக்கும், உடல் வெப்பம் நெருப்புக்கும், நமது சுவாசக்காற்று
காற்று தத்துவத்திற்கும் பொருந்துகின்றன அல்லவா. "
மாணவிகள் தலையாடுகின்றனர்.
"அதுபோல விண் எனும் பூதம் நம் உடலில் உயிராக ஓடுகின்றது."
என்று அம்மா சொன்னதும்
" இது சுத்தமாக புரியவில்லை" என்கிறார்கள் மாணவிகள்.
"இதைதான் எதிர்பார்த்தேன். இப்போது விண்ணைப் பற்றி விரிவாகப்
பார்க்கலாம்."
- தொடரும்
பிரபஞ்ச மற்றும் உயிரினத் தோற்றத்தை மிக சுருக்கமாக சொல்லும் கீழே உள்ள ஔவைக் குறள்களை படித்து வைத்துக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் உதவும்.
நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்று
உலவை இரண்டு ஒன்று விண்.
பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்
தரமாறி தோன்றும் பிறப்பு.

ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஒன்றும் இல்லா வெளியே,
வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே... - அபிராமி அந்தாதி
what is பிரபஞ்சம் ?? heard that word many times...
ReplyDeletewhat is the meaning for the ஔவைக் குறள்?
பிரபஞ்சம் - Universe
DeleteUniverse contains more than 200 billion galaxies!
அடுத்த பகுதி பிரபஞ்சம் பற்றிதான்!
குறள் written by திருவள்ளுவர் is called திருக்குறள்.
Many had written two line குறள்s.
The one written by ஔவையார் is famously known as ஔவை குறள் ! This talks mainly on spiritual developments.
"ஜகம் நீ அகம் நீ" படித்தவுடன் I remembered the Sanskrit mantra "Aham Brahmasmi". Is that concept very similar???
ReplyDeleteWaiting for பிரபஞ்சம் lesson!
அஹம் பிரம்மாஸ்மி என்பது மந்திரமல்ல - மஹா வாக்கியம்
Delete( யஜுர் வேதத்தில் பிருஹதாரண்யக உபநிடதத்தில் வருகின்றது)
அர்த்தம் - நானே பிரம்மன் ( இறைவன் என்று அர்த்தம் - நான்கு தலை பிரம்மா அல்ல )
மற்ற மூன்று மஹா வாக்கியங்கள் -
2. பிரக்ஞானம் பிரம்ம - அறிவே பிரம்மம் (ரிக் வேதம் )
3. அயம் ஆத்மா பிரம்ம - இந்த ஆத்மா பிரம்மன் ( அதர்வண வேதம் )
&
4. தத் த்வம் அஸி - பிரம்மமே நீ ( சாம வேதம் )
இவைகளைப் பற்றியும் சிந்திக்கலாம்
அறிவுத் திருக்கோவில் ஏனெனப் புரிகின்றதா?
the only ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ i know is the ilayaraja song
Deleteyour lessons in tamil are getting toooo complicated for me :(
Don't take my reply above as " lesson " now. It was reply to Sundu's comment only.
DeleteHope by this time Sundu has explained the meaning!
i like to read and understand comments too :)
Deletei think i'm happy to just listen to ilayaraja song for now...so peaceful!! :)
ஔவை குறள் is superb!!! Great lesson today!!!
ReplyDeleteஔவை குறள்கள் மொத்தம் 310. இவைகளில் வாழ்வின் நோக்கமாகிய
Deleteஇறைநிலை உணர்ந்து அதை அடைவது பற்றி
சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன
ஔவை குறள்கள் மொத்தம் 310?!!!! didn't know, more new lesson!!! I wish, I particpate/listen to the classes, conducted by you and Aunty, any chance for SKYPE??
Deleteஅய்யோ.... !!!! this tamil is turning into greek and latin for me!!!
ReplyDeletecan't you write and explain everything in simple tamil?
Hope the lessons are written in simple Tamil only.
DeleteDon't bother about my replies to others' comments now.
After some twenty lessons, you'll appriciate the Greek & Latin!
If you are not following anything in the lesson, pl tell me.
oh no...i already know about what's in the lesson..
Deleteit's the complicated tamil words you use i find hard to understand
and whenever you write any kural, it would be nice if you explain what it means.... unfortunately i'm not well versed like Priya to appreciate :))
hey Priya...that was a compliment...not a joke!! :))