'மா நிலம் சேவடி ஆக, தூ நீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக, விசும்பு மெய் ஆக, திசை கை ஆக, பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக, இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய | |
வேத முதல்வன்' - என்ப தீது அற விளங்கிய திகிரியோனே.' |
பெரிய நிலம் தன் சிவந்த அடிகளாகவும்; தூய நீரையுடைய சங்குகள் ஒலிக்கின்ற கடல் ஆடையாகவும்; ஆகாயம் மெய்யாகவும்; திசை கைகளாகவும்; தண்ணிய கதிர்களையுடைய திங்களும் ஞாயிறுமாகிய இரண்டும் இரண்டு கண்களாகவுங் கொண்டு; அமைந்துடைய எல்லாவுயிர்களிடத்தும் தான் பொருந்தி யிருப்பதன்றி; நில முதலாய எல்லாப் பொருள்களையும் தன்னுறுப்பகத் தடக்கிய வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள்; குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறாநிற்பர்; ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோம்.
இந்நற்றிணையை தொகுத்தளித்தவர் ‘பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி’ என்னும் புலவர் ஆவார்.
No comments:
Post a Comment