Thursday 7 April 2022

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள்

 


  • வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான்.
  • உலகில் போர் கருவிகளுக்கு எந்த நாடும் தடை விதித்ததில்லை புத்தகங்களுக்குத் தான் தடை விதித்தார்கள்.
  • இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன்.
  • ’சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ’உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?’ என கலைவாணர் கேட்கும் கேள்விக்கு, ’நயவஞ்சகரின் நாக்கு’ என பதில் சொல்வார் எம்.ஜி.ஆர். அது முற்றிலும் உண்மை!
  • பாதுஷாவின் கட்டளைக்கு வேலையாட்கள் அடிபணிவார்கள் காற்று ஒருபோதும் அடிபணியாது.
  • எந்தப் புத்தகமும் வாய் திறந்து பேசாது. ஆனால் ஏதோ ஒரு குரல் புத்தக வாசிப்பிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்
  • வாழ்ந்து கெட்டவர்களுக்கு இழிவான ஒரு நிலை வந்தால், அவர்கள் யாசிக்கவேண்டிய ஒரு தருணம் வந்தால், அவர்கள் உடல் கூட தயாராகிடும், நாக்கு தயாராகாது. தடுமாறும்.
  • இருப்பதிலேயே  நீளமானது, வேலையில்லாதவனின்  பகல்.
  • ஒருத்தனை உலகம் புரிஞ்சிக்கிடாம போயிட்டா தப்பில்லை,ஆனா வீடு புரிஞ்சிக்கிடாமல் போயிட்ட அந்த வாழ்க்கை நரகம்தான்..
  • அன்றாடம் சிறியதும் பெரியதுமாக எத்தனையோ கோபங்கள் சிற்றலைகளைப்போல வீசிக் கரைந்து போய்கொண்டேதான் இருக்கின்றன. என்றாலும், கோபம் என்ற பாலத்தைக் கடந்து செல்லாதவர்கள் எவரும் இருக்கிறார்களா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. 
  • மோசமான மனிதன் என்று ஒருவன் கிடையவே கிடையாது. யாரோ சிலருக்கு மோசமான மனிதன்.
  • தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது.
  • துப்பாக்கிகள் தானே வெடிப்பதில்லை. அதை வெடிப்பதற்கு ஒரு மனிதன் தேவைப்படுகிறான்' என்று சிவப்பு இந்தியர்களிடம் ஒரு பழமொழி உண்டு. வன்முறையும் சிடுக்குகளும் நம்மால்தான் உருவாக்கப்படுகின்றன.
  • ஆசைப்பட்டவற்றை நிஜத்தில் அடைவது எளிதானதல்ல. பலரும் அவற்றை கற்பனையிலே அடைந்து கொள்கிறார்கள். அதுவே போதும் என்றுகூட நினைக்கிறார்கள்.கற்பனைக்கும் நிஜத்துக்குமான இடைவெளியைக் கடந்து வருவது எளிதில்லை. பேச்சை கற்றுக்கொள்வதைப்போல் மௌனத்தை எளிதில் கற்றுக்கொள்ள முடியாது. மௌனத்தில் சொற்கள் குளத்தில் மூழ்கிடக்கும் கற்களை போல அமிழ்ந்து கிடக்கின்றன .மௌனத்தில் மனம் சலனமற்று கிடக்கிறது .
  • சொந்த ஊர் என்பது முதுகில் உள்ள மச்சத்தைப் போல அவர்களால் திரும்பி பார்க்கவே முடியாது.

No comments:

Post a Comment