தமிழ்மொழிக்குள்ள பல சிறப்புகளில் சொற்சிறப்பும் ஒன்று.
தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள்
இதற்கு எடுத்துக்காட்டாகும்.
இச்சொற்களின் சிறப்பு, உருவத்தையும்
பருவத்தையும் காட்டி நிற்பதாகும்.
ஆண்களின் பருவப்பெயர்கள்
1. பாலன் -7 வயதிற்குக்கீழ்
2. மீளி -10 வயதிற்குக்கீழ்
3. மறவோன் -14 வயதிற்குக்கீழ்
4. திறலோன் -14 வயதிற்கும்மேல்
5. காளை -18 வயதிற்குக்கீழ்
6. விடலை -30 வயதிற்குக்கீழ்
7. முதுமகன் -30 வயதிற்கும்மேல்
மற்றொரு பட்டியல்
1. பிள்ளை -குழந்தைப்பருவம்
2. சிறுவன் -பாலப்பருவம்
3. பையன் -பள்ளிப்பருவம்
4. காளை -காதற்பருவம்
5. தலைவன் -குடும்பப்பருவம்
6. முதியோன் -தளர்ச்சிப்பருவம்
7. கிழவன் -மூப்புப்பருவம்
1. பேதை - 5 வயதிற்குக்கீழ்
2. பெதும்பை -10வயதிற்குக்கீழ்
3. மங்கை -16வயதிற்குக்கீழ்
4. மடந்தை -25வயதிற்குக்கீழ்
5. அரிவை -30வயதிற்குக்கீழ்
6. தெரிவை -35வயதிற்குக்கீழ்
7. பேரிளம்பெண் -55வயதிற்குக்கீழ்
1. அரும்பு - அரும்பும்நிலை
2. மொட்டு -மொக்குவிடும்நிலை
3. முகை -முகிழ்க்கும் நிலை
4. மலர் -பூநிலை
5. அலர் -மலர்ந்தமநிலை
6. வீ -வாடும்நிலை
7. செம்மல் -இறுதிநிலை
1. கொழுந்து -குழந்தைப்பருவம்
2. தளிர் -இளமைப்பருவம்
3. இலை -காதற்பருவம்
4. பழுப்பு -முதுமைப்பருவம்
5. சருகு -இறுதிப்பருவம்
No comments:
Post a Comment