Sunday, 10 April 2022

எல்லாம் தெய்வம் - பாரதி

 


எல்லாம் தெய்வம் கண்டீர்

உயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்
பிற ஒன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,
மேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வம் 
இந்த எழுத்தும் தெய்வம்
-பாரதி



No comments:

Post a Comment