Thursday 28 April 2022

அரசன்குடி கிராமீய சேவைத் திட்டம்

 


அரசன்குடி கிராமீய சேவைத் திட்டம் 

இந்த கிராமத்தில் மேற்கொள்ள இருக்கும் சேவைத் திட்டம் உலக சமுதாய சேவா சங்கத்தின் 240வது கிராமமாகும். திருச்சி மண்டலத்தைப் பொறுத்தவரையில் 26வது கிராமமாகும். 

துவக்க விழாவில் இத்திட்டம் பற்றி கிராம மக்களுக்கு புரியும் வகையில் இயல்,இசை, நாடகம் கலந்து கிராமீய நடனங்களுடன் மிக சுவாரஸ்யமாக 45 நிமிடங்களில் அருமை கலைக்காரியாலயக் குழுவினர் நடத்துகின்றனர். அரசன்குடியில் இவர்கள் நடத்தும் நிகழ்ச்சி கிராமீய சேவைத் திட்ட துவக்க நிகழ்ச்சிகளில் 200வது நிகழ்ச்சியாகும். இக்குழுவினர் பற்றிய சிறு அறிமுகம் -

திருச்சி  அருமை கலைக் காரியாலயம்

அருமை கலைக் காரியாலயம் கடந்த 20 ஆண்டுகளாக திருச்சியில் ' கலை வழிஅமைதி நெறி' என்ற கோட்பாடு டன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கலைச் சேவை செய்து வருகிறது.

குறிப்பாக உலக புகழ் பெற்ற 'கலைக்காவிரி' யின் வழி காட்டுதல் மூலம் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டத்தில் இணைந்து ஒரு சிறப்பு மிக்க கலைக் குழு வாக செயலாற்றி வருகிறது 



அனுபவம் மிகுந்த கலைஞர்களை கொண்டு கிராமிய நடங்களான கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மான் கொம்பு, கரகம் மற்றும் பல்வேறு வகையான நடங்களுடன் குறு நாடகங்கள், கதா காலட்சேபம் இவைகளை இணைத்து தரமான கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தி வருகிறது 

மேடை நாடகங்களில் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக கருத்துள்ள நாடகங்கள் நடத்தி தமிழகத்தின் பல்வேறு கலைக் குழு க்களிடம் பரிசு களும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் குவித்து க்கொன்டு வருகிறது 

குழு வில் இடம்பெற்றள்ள கலைஞர்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சி களிலும், பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் நம் இந்திய கலை, கலாச்சாரம் பண்பாடு இவைகளை பறைசாற்றும் கலைத் தூதுவர்களாக,  அமைதியின் தூதுவர் களாக செயலாற்றி வருகிறது 

மே 1 ம் தேதி மாலை அரசன்குடி கிராமத்தில் இவர்கள் நடத்தும் 200வது நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள். 

அனைவரும் அரசன்குடி கிராமத்திற்கு மே 1ம் தேதி மாலை வந்திருந்து துவக்க விழா சிறப்பாக நடத்திட  வேண்டுகின்றோம். வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment