Wednesday, 1 August 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 12


 சுவிட்சர்லாந்து - 4

இன்று ஆகஸ்ட் 1 ம் தேதி - சுவிஸ் சுதந்திர தினம். 











நான் 1989 ல் இந்த நாளில் அங்கிருந்தபோது  அரை மணி நேரம்தான் விடுமுறை. இப்போது முழு நாள் விடுமுறை தரப்படுகின்றது என ஒரு நண்பர் தெரிவித்துள்ளார். 
அன்று மாலை நானிருந்த Baden நகரில் இசை நிகழ்ச்சிகள், ஊர்வலம்  மற்றும்  carnival எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஊர்வலத்தில் குழந்தைகள் கலர் பேப்பரிலான கூண்டுகளில் விளக்கேற்றி எடுத்துச் சென்றது அழகாக இருந்தது. ஊர் மேயர் ஜெர்மன் மொழியில் பேசி முடித்ததும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு வான வேடிக்கைகள் நடந்தது. பொதுவாக சுவிஸ்ஸில் இரவு எட்டு மணிக்கு மேல் நடமாட்டம் இருக்காது.
ஆனால் ஆகஸ்ட் 1 ம் தேதி இரவு பன்னிரண்டு வரை மக்கள் carnival ல் நேரத்தை செலவிட்டு கொண்டாடிக்கொண்டிருந்தனர். 


Locate  JP
Fireworks

அழகிய ரைன்  வாய்க்கால்  ஓரத்திலே  

2 comments:

  1. last foto looks like...

    Baden நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது ... :)

    ReplyDelete
    Replies
    1. நான் சுவிஸ்ஸில் இருந்த ஐம்பது நாட்களிலும் தனிமையைத்தான் உணர்ந்தேன். இந்தியாவுக்கு போன் பண்ணி பேச வசதியில்லை. நான் தங்கியிருந்த விடுதிக்குப் பக்கத்தில் ஓடும் ரைன் ஆற்றங்கரையில் போய் உட்கார்ந்திருப்பதுண்டு.

      Delete