Saturday, 25 August 2012

மாலை மாற்று ( Palindrome )


BEST  EXAMPLES -

Don't nod
Dogma: I am God
Never odd or even
Too bad – I hid a boot
Rats live on no evil star
No trace; not one carton
Was it Eliot's toilet I saw?
Murder for a jar of red rum
May a moody baby doom a yam?
Go hang a salami; I'm a lasagna hog!
Satan, oscillate my metallic sonatas!
A Toyota! Race fast... safe car: a Toyota
Straw? No, too stupid a fad; I put soot on warts
Are we not drawn onward, we few, drawn onward to new era?
Doc Note: I dissent. A fast never prevents a fatness. I diet on cod
No, it never propagates if I set a gap or prevention
Anne, I vote more cars race Rome to Vienna
Sums are not set as a test on Erasmus
Kay, a red nude, peeped under a yak
Some men interpret nine memos
Campus Motto: Bottoms up, Mac
Go deliver a dare, vile dog!
Madam, in Eden I'm Adam
Oozy rat in a sanitary zoo
Ah, Satan sees Natasha
Lisa Bonet ate no basil
Do geese see God?
God saw I was dog
Dennis sinned 
01 02 2010  ( Feb1, 2010 )

மாலை மாற்று

ஒரு சொற்றொடரையோ அல்லது செய்யுளையோ முதலிலிருந்து கடைசி வரையோ அல்லது கடைசியிலிருந்து முதல் எழுத்து வரை  வாசித்தாலோ அதே சொற்றொடரோ அல்லது செய்யுளே வந்தால், அது மாலை மாற்று எனப்படும். 

உதாரணங்கள் =

 கற்க
 குடகு, 
 விரவி
 மேகமே
 விகடகவி
 மாயமான் மாயமா
,ராமகுமரா
 மாறுமா
 மேளதாளமே  

தேரு வருதே 



தண்டியலங்காரக் குறள் -


நீவாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ.


இதற்குப் பொருள் சொல்வது எளிதன்று!

சான்றோர் சொல்லும் பொருள் :

நீவாத = நீங்காத, மா தவா =  பெரிய தவத்தையுடையாய்!, தா மோக ராகமோ தாவாது = மிக்க மயக்க வேட்கை கெடாது; (ஆதலால்) அ மாது = அழகிய மாதினுடைய, அவா = ஆசையை, நீ =  நீக்குவாயாக .

( தாவாது + அ = தாவாத;  மாது + அவா = மாதவா என்று ஆகிவிடும்


'திருமாலைமாற்று'

'மாலைமாற்று', என்பது ஓர் அற்புதமான யாப்பு வடிவம் ஆகும்.

இப்படிப்பட்ட யாப்பு வடிவத்தினைத் தமிழ்மொழியில் முதன்முதலில் கண்டுபிடித்துக் கையாண்டவர் திருஞானசம்பந்தப்பெருமான் ஆவார். தமிழ் யாப்பில் அற்புதமான புரட்சிகள் செய்தவர் 
ஒருபாடல் முழுவதையும் இப்படி அமைத்துப்பாடியுள்ளார். ஒரு பாடலா? ஒரு பதிகமே, பதினோரு பாடல்களைப் பாடியுள்ளார். .

பாடல்:1 (யாமாமா)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
இப்பாடலின் சொற்பிரிப்பு
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா
இதன்பொருள்
யாம்- ஆன்மாக்கள் ஆகிய யாமே கடவுள் என்று கூறினால்,
ஆமா- அது சரியாகுமா?;
நீ- நீ தான் கடவுள் என்றால் அது,
ஆம்ஆம்- அது சரியாகும் ஆம்;
மாயாழீ- பேரியாழை வாசிப்பவனே, (மாயாழ் என்பது பேரியாழ் ஆகும்)
காமா- யாவரும் விரும்பும் கட்டழகா;
காண்- யாவரும் காணும்படியாக,
நாகா- நாகங்களையே(பாம்புகளை) அணிகலனாகப்பூண்டவனே, நாகா.
காணா-எவரும் காணாதபடி,
காமா- காமனைச் செய்தவனே (அதாவது, எரித்து அழித்தவனே)
காழீயா- சீகாழீப்பதியில் எழுந்தருளியுள்ளவனே,
மாமாயா-திருமகளுக்குக் கணவனான திருமாலாகவும் இருப்பவனே.(இங்கு மா- திருமகள்,இலக்குமி)
நீ- நீ,
மா-கருமையாக உள்ள (அறியாமையைச் செய்கின்ற),
மாயா- மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக.

 பாடல்:2 (யாகாயாழீ)

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா

 பாடல்:3 (தாவாமூவா)

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநா தாநாழீ காசாதாவா மூவாதா

 பாடல்:4 (நீவாவாயா)

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

 பாடல்:5 (யாகாலாமே )

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயமே லாகாயா

 பாடல்:6 (மேலேபோகா)

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
சேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

 பாடல்:7 (நீயாமாநீ)

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

 பாடல்:8 (நேணவிராவிழ)

நேணவிராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணணே

 பாடல்:9 (காலேமேலே)

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

 பாடல்:10 (வேரியுமேணவ)

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே

 பாடல்:11 (நேரகழாமித)

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே 


Jp's Palindrome -

மாலா போலாமா  ? 

6 comments:

  1. Palindromes:

    Malayalam
    மோரு போருமோ
    :)

    ReplyDelete
  2. Love that...மாலா போலாமா ? cute....

    ReplyDelete
  3. wanted to say the same thing...
    out of all your tamil palindromes the only thing that made sense to me was...." .மாலா போலாமா " :)

    ReplyDelete
  4. Wonderful "மாலை மாற்று"!!!!!

    ReplyDelete
  5. Awesome!!! learnt something New

    ReplyDelete
  6. மாலா போலாமா :)nice!

    ReplyDelete