Thursday, 9 August 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 13

நான் மூணாம் வகுப்பு படிக்கும்போது எடுத்த போட்டோ.
இதுல இருக்கிற எல்லோரோட பெயரும் ஞாபகத்துல இருக்கு.
இவங்க இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியல( except one ) ..
எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்! 

1960


கிளாஸ் டீச்சர் திரு கனகசபை நெருங்கிய சொந்தம். "கனவசப்பா" என்று கூப்பிடுவோம். தினமும் ஒரு கதை சொல்லுவார். விடுகதை போடுவார். மதியம் வகுப்பு ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு மாணவனிடம் மத்தியானம் என்ன சாப்பிட்டாய், தொட்டுக்க என்ன என்று விசாரிப்பார்.

இவருக்கு காது கேட்காது.  ஒருமுறை வீட்டுக்கு வந்தபோது இவருக்கு இட்லிக்கு தொட்டுக்க அம்மா மிளகாய்ப்பொடி என நினைத்து போர்ன்விடாவை வைத்து எண்ணை ஊற்றிக் கொடுக்க இவரும் அதை ரசித்து சாப்பிட்டார்! இவரைப்பற்றியும் நிறைய நினைவுகள் உள்ளன.

இவரால்தான் நான் நேரிடையாக மூன்றாம் வகுப்பில் சேர்ந்தேன்!

3 comments:

  1. looking very smart in hat
    I recognize the "except one" person

    ReplyDelete
  2. I recognize "except one" and at least "2 others" :) The "2 others" are 1) School Librarian's son 2) Koranad Peanut shop onwer's son (his youngest brother was my class mate).

    ReplyDelete
  3. @Sheila
    There are 3 in the foto with hats! Do you know exactly who is JP ;)

    ReplyDelete