Monday 3 September 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 14

சித்திர ஞானம்

ஏழாவது படிக்கும்போது நானும் சித்திரம் வரைய ஆரம்பித்தேன். என் பெஞ்ச்மேட் குணசேகரன் சமூக புத்தகத்தில் உள்ள தலைவர்களின் படங்களை அப்படியே வரைந்து அசத்துவான். அவனைப் பார்த்து பார்த்து நானும் படம் வரைய ஆரம்பித்தேன். நான் ட்யூசன் சென்ற இடத்தில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த சந்திர மோகன் அண்ணன்தான் எனக்கு காளி மார்க் கலர் விளம்பரங்களைக் கொடுத்து அந்த படங்களை அப்படியே வரையச் சொல்லி திருத்தங்கள் செய்வார். பிறகு கற்பனை செய்து படம் போடச் சொல்வார். 

எனக்கு ஓரளவு line sketch போட வந்ததற்கு காரணமான சந்திரமோகன் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்!

சமீபத்தில் கிடைத்த அந்தகால காளி மார்க் விளம்பரம் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. மூணு செகண்டில் யானை படம் போடும் அளவிற்கு என் திறமை(?) வளர்ந்திருப்பதற்கு கீழே உள்ள விளம்பரத்தில் உள்ள யானையும் காரணம்!


No comments:

Post a Comment