Friday 21 September 2012

உலக அமைதி தினம்


அமைதி - இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். 

அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து. உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் செப்., 21ம் தேதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1981ல் முதன் முதலாக தொடங்கப்பட்ட இத்தினம், உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து, அமைதி நிலவ, ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் கல்வி, விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் போட்டி போடுகின்றன. இந்த போட்டி, ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது. மாறாக சில நாடுகள், மற்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகின்றன.

பயங்கரவாதம் ஒழிய...: உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது அந்த நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் அமைதிக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அனைத்து நாடுகளும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என ஐ.நா., சபை வலியுறுத்துகிறது. மாறாக வன்முறையை தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது, பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து நாடுகளும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒழிய, அமைதியான உலகை உருவாக்க முடியாது. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டவர்களை பாராட்டும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் ஐ.நா., வின் அமைதி பரிசு ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


A journalist assigned to the Jerusalem bureau takes an apartment overlooking the Wailing Wall.

 Every day when she looks out, she sees an old Jewish man praying vigorously. So, the journalist goes down and introduces herself to the old man.

She asks, “You come every day to the wall. How long have you done that and what are you praying for?”

The old man replies, “I have come here to pray every day for 25 years. In the morning I pray for world peace and then for the brotherhood of man. I go home have a cup of tea and I come back and pray for the eradication of illness and disease from the earth.”

The journalist is amazed. “How does it make you feel to come here every day for 25 years and pray for these things?” she asks.

The old man looks at her sadly. “Like I’m talking to a wall.” 

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

அறிவும் அன்பும் கலந்திடவே
அழவில் வையம் மலர்ந்திடவே

நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் 


No comments:

Post a Comment