Saturday 8 September 2012

SATURN ( சனி )

மறுபடியும்  சனி  தரிசனம் 

சனி  

சனி கிரகம் சூரியனைச் சுற்றி ஆறாவது வட்டப் பாதையில் 88 கோடி மைல் தொலைவில் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. இந்த கிரகத்தை  62 சந்திரன்கள் சுற்றுகின்றன, சனி வலயத்தினுள்ளே நூற்றுக்கணக்கான குட்டி சந்திரன்கள் இருக்கின்றன. சனி நிலவான டைடன் புதன் கிரகத்தை விட பெரியது

சனிப்பெயர்ச்சி..

மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி
அப்படின்னா என்னங்க..?

நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்

குருப்பெயர்ச்சி !



கல்யாணம் முடிஞ்சு அடுத்தநாள் கோயிலுக்கு போகும்போது மனைவியின் காலில் முள் குத்தி விடவே கணவன் திட்டினான்..."சே..சனியன் பிடிச்ச முள்ளு..."


ஆனா 10 வருஷத்துக்கு பிறகு அதே கோயிலுக்கு போகும்போது மனைவியின் காலில் அதேமாதிரி முள் குத்தி விடவே கணவன் திட்டினான்..."சனியனே....கீழ பார்த்து வரக்கூடாதா...? முள்ளு கிடக்கிறது தெரியாதா..? ...!

ஏங்கிப்போன மனைவி "என்னங்க..?" என்று  கேட்க கோயில் பூசாரி சொன்னாராம்..இது தான்...சனிப்பெயர்ச்சி !




4 comments:

  1. haha... good சனி jokes :)

    ReplyDelete
  2. but JP, என் மங்கை has no தங்கை....

    ReplyDelete
    Replies
    1. So sad...
      No பெயர்ச்சி for you..
      don't get mad!

      Delete
    2. yeah..JP, just like you :)

      Delete