Tuesday 4 September 2012

செவ்வாய்


இன்று செவ்வாய்  தரிசனம்.



மேலே கன்னிராசி  

VIRGO  AUG 24 - SEP.23

உத்திரம்,அஸ்தம் & சித்திரை நட்சத்திர கூட்டங்கள் 

( Denabola,  Corvi  &  Spica )


ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
- கண்ணதாசன்



கியூரியாசிட்டி செவ்வாய் கற்பாறையில் துளை


நாஸா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியாசிட்டி இயந்திரம் முதல் முறையாக அங்குள்ள கற்பாறை ஒன்றில் லேசர் கருவி மூலம் துளையிட்டு சோதனை செய்துள்ளது.

ஆறு சக்கரம் கொண்ட அதிநவீன தொழிநுட்பங்களாலான இந்த இயந்திரம் தனது செயற்பாடுகள் குறித்து சோதனை முயற்சியாகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் கிரக கற்பாறை ஒன்றில் துளையிட்டுள்ளது. இதன் போது கியூரியாசிட்டி இயந்திரம் 10 வினாடிகளில் கற்பாறை மீது 30 லேசர் அதிர்வுகளை ஏற்படுத்தி சிறு துளை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.


செவ்வாயில் தரையிறங்கிய கியூரியாசிட்டி இயந்திரம் கோளாறின்றி செயற்படுகிறதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே லேசர் கருவியின் செயற்பாடு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டு செயற்பாட்டைக் கொண்ட இந்த இயந்திரம் தனது ஆய்வுகளின் போது பல்வேறு கற்பாறைகளை துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.


செவ்வாய் கிரகத்தின் ஒரு பள்ளத்தாக்கில் தரையிறங்கிய இந்த இயந்திரம் அருகில் இருக்கும் மூன்று மைல் கொண்ட மலை ஒன்றின் உச்சியை சென்றடைய திட்டமிட்டுள்ளது. இதன் போது நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த இயந்திரம் ஆய்வு நடத்தவுள்ளதோடு மனிதர் வசிப்பதற்கு பொருத்தமானதா என்பது குறித்தும் சோதனை நடத்தும்.

சிந்தனைக்கு  -

செவ்வாய் கிழமையை வடஇந்தியாவில் மங்கள்வார்ன்னு  சுப நாளா குறிப்பிடறாங்க...மங்கள காரியங்கள் செய்றாங்க..
ஆனா தமிழ்நாட்டில செவ்வாய்கிழமை அன்று சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை..

ஏன் ?



3 comments:

  1. அறியாத தகவல்கள்... படங்கள் classic...

    ReplyDelete
  2. ஏனென்றால் அவர்கள் மூட நம்பிக்கை உள்ளவர்கள் :)

    ReplyDelete
  3. ஏனென்றால், செவ்வாயோ வெருவாயோ!! :)

    ReplyDelete