Wednesday 19 September 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 15


பிள்ளையார் சதுர்த்தி வருதுன்னாலே 
அம்மா எவ்வளவு மரக்காலுக்கு கொழுக்கட்டைன்னு  ப்ளான்  பண்ணி வெல்லப்பூரணம், உப்புப்பூரணம் எல்லாம் தயார் பண்ணி வச்சுடுவாங்க. சதுர்த்தி அன்னிக்கி விடிகாலையிலே கொழுக்கட்டை பண்ண  ஆரம்பிச்சா சாயந்திரம் வரைக்கும் செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. மதிய நேரத்துல
 வடை, சுண்டல், பாயசம் இதெல்லாம் வேற செஞ்சு அப்புறம் தெரு பிள்ளையார், தெற்கு தெரு பிள்ளையார்பெரியதெரு பிள்ளையார், முனிசிபாலிட்டி பிள்ளையார்ஆடிய  பிள்ளையார் கோவிலுக்கெல்லாம் போய் படைச்சுட்டு வீட்ல இருக்குற பிள்ளையாருக்கெல்லாம் படைச்சப்புறம்தான் கொழுக்கட்டை சாப்பிட முடியும்.


முனிசிபாலிட்டி பிள்ளையார் அப்ப ஒரு சின்ன கொட்டகையில் இருந்தது. விளக்கேத்தி சூடம் எத்தறத்துக்குள்ள பத்து எறும்பாவது கடிச்சிடும்!

ஆடிய பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டுவர லேட்டாகும்..அது காவிரிக்கு அக்கரையில இருக்கிறதால காவிரியில இறங்கி க்ராஸ் பண்ணனும்..காவிரியில ரொம்ப தண்ணி போச்சுன்னா பாலம் இருக்குற தூரம் நடந்து க்ராஸ் பண்ணனும்ஆடிய பிள்ளையார் பாசனத்துக்கு விடப்பட்ட வாய்க்கால் நடுவே தண்ணியில் இருக்குற சாமி. எப்பவும் பாதி பிள்ளையார் தண்ணியில இருக்கும்.. பிள்ளையார் முழுதும் தண்ணியில முழுகிட்டால் உலகம் அழிஞ்சுடும்ன்னு பேசிப்பாங்க..
மழைக்காலத்துல அக்கரையில இருந்து வர்ற ஸ்கூல் பசங்க புள்ளையாரு நெத்தி வரைக்கும் தண்ணி வந்துடிச்சி..ஒலகம் அழியப்போவுதுன்னு பயப்படுவாங்க.. 

அம்மா விதவிதமான கொழுக்கட்டை பண்ணுவாங்க.. பிள்ளையார் மாதிரியே மாவுல பண்ணி அதுக்கு மூஞ்சூறு வாகனமும் கொழுக்கட்டையில பண்ணுவாங்க..அப்புறம் பலபேர் வீட்டிலேருந்து கொழுக்கட்டை வரும்..அவங்களுக்கு நம்ம வீட்டு கொழுக்கட்டை வச்சு அனுப்பணும்.. 

அப்பா பல ஊர் கோவில்களுக்குப் போய் யானை தரிசனம் பண்ணிட்டு வருவாங்க.. 

 
சதுர்த்தி அன்னிக்கி காலையில வாசல்ல களிமண் பிள்ளையார் வித்துக்கிட்டு போவாங்க..பல சைஸுல சின்னதா, பெரிசா, விதவிதமான பிள்ளையார் வாங்கலாம்.
ரொம்ப பெரிய சைஸ் பிள்ளையார் முக்கால் ரூபாதான்! களிமண் பிள்ளையாரை பயபக்தியோட ஒரு கோலம் போட்ட பலகையில் வைத்து அருகம்புல் மாலை, எருக்கம்மாலை எல்லாம்போட்டு ஒரு சின்ன குடை பிடித்து சாமி ரூம்ல வச்சு பூஜை செய்யணும்பிள்ளையாருக்குப் பிடிச்ச கரும்பு, கொய்யாப்பழம், நாகப்பழம், விளாம்பழம், பொறி, கடலை போன்றவைகளையும் பூஜையில வைக்கணும். நெறையபேரு அடுத்த நாளே பிள்ளையாரை காவிரியிலேயோ அல்லது வீட்டு கிணத்துலேயோ போட்டுடுவாங்க. நம்மவீட்டு பிள்ளையார் மாத்திரம் எப்பவும் பூஜைரூமிலேயே இருக்கும்..

1968 வருஷம் நான் SSLC  பரிட்சையில ஸ்கூல் ஃபஸ்ட் வந்தாலும் என்னால எந்த காலேஜிலேயும் சேர முடியல..காரணம் under age ! டைப்ரைட்டிங் ஷார்ட்ஹேண்ட் கத்துக்கிட்டுருந்தப்ப பிள்ளையார் சதுர்த்தி வந்துச்சி..துளசியக்கா  கல்யாணமாகி சிதம்பரத்துல இருந்தாங்க.அம்மா எங்கிட்ட அக்காவுக்கு கொழுக்கட்டை 
கொடுத்திட்டு வர சிதம்பரம் அனுப்பினாங்க..அந்த வருஷம் இஞ்சினீரிங்பாலிடெக்னிக் காலேஜ்ல அட்மிசன் சரியா போகுல.. அத்தானோட அண்ணன் பையன் இருபது வயசுல பாலிடெக்னிக்  சேந்திருந்தாரு..அத்தான் எனக்காக  பாலிடெக்னிக் ப்ரின்சிபாலைப் பாத்துப்   பேசி என்னை  முதல் வருஷம் ( Pre Technical Course ) சேத்து விட்டாங்க.. நான் சேந்த அன்னிக்கி முதல் டெர்ம் பரிட்சை  ஆரம்பிச்சிருந்தது.. அத்தான் எனக்கு Maths , Physics கத்துக் கொடுத்து,  தெரிஞ்ச லெக்சரர்கிட்ட எல்லாம் என்னை அனுப்பி வச்சு என்னை பிரமாதமா தயார் பண்ணுனாங்க..

அந்த வருஷம் PTC யில ஸ்டேட் ஃபஸ்ட ராங்க் வாங்கினேன். அப்புறம் BE  சேந்தது தனிக் கதை..! 

1968 ம் ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி என் லைப்ல ஒரு டேர்னிங் பாய்ண்ட்  கொடுத்தது  என்னால  எப்பவும்  மறக்க முடியாத ஒன்று!



எனக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அத்தான் - அக்காவுடன்  





11 comments:

  1. Sri... you look too cute! :)

    Is Mala making கொழுக்கட்டை?

    ReplyDelete
    Replies
    1. Sri is looking cute-O-cute even now too...

      Delete
    2. கொழுக்கட்டை செய்வதில் மாலா எக்ஸ்பெர்ட். நேற்று அவளுக்கு இரூர் கிராமத்தில் மெடிக்கல் காம்ப் இருந்ததால் 18ம் தேதியே கொழுக்கட்டை செய்து
      சாப்பிட்டாகிவிட்டது!

      Delete
    3. கொழுக்கட்டை செய்வதில் மாலா எக்ஸ்பெர்ட்.......hmmm...ground-breaking news :)

      Delete
  2. I remember Appayi's பிள்ளையார் கொழுக்கட்டை :)) ...and also பிள்ளையார் idols sold by street vendors!

    ReplyDelete
  3. கொழுக்கட்டை சாப்புடுட்டே (dinner) reading this blog.

    After long time, reading மரக்கா (nice tamil word). yeah, even in Triplicane, i used to visit all பிள்ளையார் கோவில். Does பிள்ளையார் love கரும்பு?

    Swa made மூஞ்சூறு வாகனம் கொழுக்கட்டை today and i ate it :)

    1968 is not turning point but borning point for me :)

    By the way, JP, i knew what கொழுக்கட்டை Mala would've given you today :)

    ReplyDelete
    Replies
    1. கரும்பு பிடிக்காத யானை உண்டா?


      தலையில் என்ன இப்படி கொழுக்கட்டைபோல் வீங்கியிருக்கு?

      என் பொண்டாட்டி இனிமேல் என்னை அடிக்கமாட்டேன் என்று

      தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினாள்!

      Delete
    2. KG க்குதான் அத்திரிபாச்சா கொழுக்கட்டை !

      Delete
    3. அத்திரிபாச்சா not for me but for JP பாச்சா

      Delete