Blog எழுதத் துவங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகின்றது.
இதையொட்டி ஜலீல் பிப்ரன் JPஐ பேட்டி காணுகிறார் -
ஜலீல் பிப்ரன் :
பட்டங்கள் பலகோடி பெற்ற, மயிலாடுதுறை மன்னன், நாளைய வரலாறு, நடமாடும் பல்கலைக் கழகம், , ஜோதிட கலாநிதி இன்னும் பலவாறாகப் போற்றப்படும் நான் உங்களை பேட்டி காண்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
JP :
ஞானவயல் வாசகர்களின் Head Letters !
ஜலீல் பிப்ரன் :
எனது 2013ம் ஆண்டு ராசி பலன்கள், கவிதைகள், கதைகள், போட்டோக்கள் போன்றவைகளை ஞானவயலில் போடாதது குறித்து எனது ரசிகர்கள் உங்கள் மீது கோபமாக இருப்பது தெரியுமா?
JP :
தெரியும்!
ஜலீல் பிப்ரன் :
அப்ப, இந்த ஆண்டு வருமா?
JP :
வரலாம்...
ஜலீல் பிப்ரன் :
ஆன்மீக ஆனா, ஆவன்னா அப்படியே நிக்குதே?
JP :
ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி மற்றும் 20ம் தேதி பாடங்கள் வரும்.
கேள்விகள் நிறைய எதிர்பார்க்கிறேன். கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க..!
ஜலீல் பிப்ரன் :
சித்தர்கள் பற்றி அப்புறம் ஒண்ணுமே போஸ்ட் பண்ணலையே..?
JP :
மாதம் ஒரு சித்தர் பற்றி பதிவு பண்ண விருப்பம்.
ஜலீல் பிப்ரன் :
திருக்குறள் மற்றும் தமிழ் பாடல்கள் விளக்கங்களும் நின்று விட்டதே?
JP :
நண்பர் ஒருவரின் அறிவுரையின்படியும், வாசகர்கள் ஆதரவின்மையாலும் நின்று விட்டது.
ஜலீல் பிப்ரன் :
தென்றல் நினைவுகள் இந்த மாதம் ஒன்று கூட வரவில்லையே?
JP :
நினைவுகள் தொடர்பான போட்டோக்கள் தேடி எடுப்பதில் நேரம் போய் விடுகின்றது.
ஜலீல் பிப்ரன் :
எதையெல்லாம் பதிவு செய்ய விருப்பம்?
JP :
நான் வசித்த இடங்கள், பார்த்த ஊர்கள், பழகிய நண்பர்கள், குடும்பம், உறவினர்கள், அலுவலகம், மனவளக்கலை என நிறைய பதிவு செய்ய ஆசை.
ஜலீல் பிப்ரன் :
Face Book ல் ஏன் வரவில்லை?
JP :
நிறைய பேர்கள் அழைக்கிறார்கள். இன்னும் நுழையவில்லை. சீக்கிரம் வர வாய்ப்பு உள்ளது.
ஜலீல் பிப்ரன் :
இந்த 475 post களில் பெரும்பாலானவை cut & paste தானே?
ஆம். நான் படித்தவைகளில் சிலவற்றைத்தான் பதிவு செய்துள்ளேன். படிப்பவர்களின் விருப்பம் தெரியாததால் தொடருகின்றேன்.
ஜலீல் பிப்ரன் :
இந்த இரண்டாம் ஆண்டில் என்ன எதிர்பார்க்கலாம்?
JP :
BHEL பணி இந்த ஆண்டுடன் நிறைவு பெறுவதால் ஓய்வு கிடைப்பது சிரமம்.
எனினும் நேயர் விருப்பம் தெரிந்தால் நிறைவேற்ற முயல்வேன்.
ஜலீல் பிப்ரன் :
மறுபடியும் கேட்கின்றேன்,,இந்த ஆண்டு எனக்கு வாய்ப்புண்டா?
JP :
மாதம் ஒருமுறை.. ..முயற்சிக்கிறேன்!
ஜலீல் பிப்ரன் :
நிறைவாக...?
JP :
உற்சாகமூட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!