Thursday 22 May 2014

நட்பு....13

 நாலடியார்     
(அதிகாரம்    கூடா நட்பு)


செய்யாத செய்து’ நாம் என்றலும் செய்வதனைச்
செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும் -மெய்யாக
இன்புறூம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூம் பெற்றி தரும்


செய்யாத செய்து’ நாம் – இயலாதவற்றை ‘நான் செய்வேன்’ என்பது
செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும்- செய்யக் கூடியவற்றைச் செய்யாமல் காலம் தாழ்த்துவதும்
இன்புறூம் பெற்றி – இன்ப நிலை (பேறு)
துன்புறூம் பெற்றி-  துன்ப நிலை



பொருள்:   தன்னால் செய்ய இயலாததைச் செய்வேன் என்று வாக்குறுதி தருவதும், தன்னால் செய்யக் கூடியது ஒன்றை, செய்யாமல் காலம் தாழ்த்துவதும், இன்பம் என்பது தேவையற்றது என்று ஒதுக்கியவருக்கும் (இகழ்ந்து சுகத்தைத் தள்ளி வைத்தவருக்கும் துன்ப நிலையையே தரும்)

நாலடியாரின் இந்த வெண்பாவின் பொருளை நாம் இது எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறது என்று பார்த்தால் மட்டுமே பொருள் பிடிபடும். இந்தப்பா “கூடா நட்பு” என்னும் அதிகாரத்தின் கீழ் வருகிறது.

கூடா நட்பு என்னும் எச்சரிக்கை யாருக்குத் தரப் பட வேண்டும்? நேரான வழியில் போய்க் கொண்டிருப்பருக்கும் நல்ல பண்பான மரியாதையான வாழ்க்கை முறையில் இருப்பவருக்கும். 


அப்படி இருப்பவர்கள் கொடுத்த வாக்குத் தவறும் சூழலுக்கோ அல்லது போலியான வாக்குறுதி கொடுப்பதற்கோ ஒருக்காலும் ஒப்ப மாட்டார்கள். ஆனால் அப்படி அவர்கள் அதில் மாட்டிக் கொள்ள, கூடா நட்பு வழி வகுத்து விடும்.

No comments:

Post a Comment