Wednesday 14 May 2014

நட்பு....7

“வேற்றுமையின்றி  கலந்திருவர்  நட்டக்கால் 
தேற்றா வொழுக்கம்  ஒருவன்  கண்  உண்டாயின்
ஆற்றுந்  துணையும்  பொறுக்க, பொறா னாயின் 
தூற்றாதே தூர  விடல்  “

இருவர்  சேர்ந்து  இருக்கும்போது  ஒருவருடைய  நடத்தையில்  பிடிக்காத விஷயம்  நடந்தால் ,அதை  பொருட்படுத்தாது  நடத்தல் வேண்டும். அப்படி அது  எல்லை  மீறினால்,  அந்த   நட்பை விக்கிக்  கொள்ளலே தவிர   நண்பனது  குணங்களை (அல்லது  குணமின்மையை] தூற்றுதல் கூடாது.


முடிந்தவரை  நல்ல  பழக்கங்கள்  உள்ளவர்களையே  நண்பர்களாய் கொள்ளல்  நன்று.   சிநிகிதம்  ஆனபின் , நண்பனை   எல்லா சமயத்திலும் மதித்தல் வேண்டும்.  அவனிடத்தில்  அயோக்கியமான நடவடிக்கை உண்டானால், அவனுக்கு  உணர்த்தி  அவனை பொறுத்தல்  வேண்டும்.  அது  முடியாமற் போனால்,  நட்பை விட்டாலும்  விடலாமே தவிர, எக்காரணம்   கொண்டும்  –  நட்பையோ,  நண்பனையோ   பழித்தல் கூடாது.  

No comments:

Post a Comment