Friday 23 May 2014

நட்பு....14

ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."

நட்பு எனும் கலையானது,
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.

சமீபத்தில் நெட்டில்  நான் படிததது -

பள்ளி முடிந்த பின்னும் 

வீடு திரும்பாமல் 
நண்பர்களுடன் 
மாலை ஆறு மணி வரை 
வியர்க்க வியர்க்க ஓடி பிடித்து 
விளையாடிய போது வியர்வையை விட
அதிகமானது நட்பு

கல்லூரியில் சேர்ந்த பின் 
வீடு திரும்ப தாமதமானால் 
நண்பன் வீட்டில் நானும் ஒரு பிள்ளையாய்
தங்கிய போது பாசத்தை விட 
உயர்ந்தது நட்பு

வேலை தேடி அலையும் போது 
ஒன்றாய் நேர்முக தேர்வுக்கு சென்று
கிடைக்காத வேலையை
திட்டிக் கொண்டே 
தோழர்களுடன் சினிமா சென்ற போது
சுமை தாங்கியானது நட்பு

வேலை கிடைத்து ஒவ்வொருவரும் 
வேறு வேறு ஊர்களுக்கு
சென்று விட்ட பின் 
வாரம் ஒரு முறை அனுப்பும் 
இரு வரி ஈ-மெயிலிலும் 
நண்பர்களுக்கு கொடுக்கும் மிஸ்டு காலுமாக
மாறி போனது இன்றைய நட்பு...

No comments:

Post a Comment