Friday 25 July 2014

நன்றி....3


ஒருவர் பயன் கருதாது செய்த நன்மையை யார் தீமையாகக் கருதுவர் என்பதை நாலடியார் எடுத்துக் கூறுகிறது.  ஒருவர் ஒரு நன்மை செய்திருந்தாலும் சான்றோர்கள் அதற்காக  அவர்கள் செய்கின்ற நூறு பிழைகளைக் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மை செய்து, தற்செயலாக அவர்கள் பார்வையில் ஒன்று தீதாகத் தெரிந்தாலும் செய்த எழுநூறு நன்மையும் தீமையானதாகவே கருதுவர் என்று நாலடியார் கூறுகிறது. எனவே நாலடியாரின் கூற்றுப்படி ஒருவர் செய்த நன்மையை மறப்பவர் கயவர் ஆவார். 

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீதாயின்
எழுநூறும் தீதாய் விடும்                                  - (நாலடியார்: 357)

No comments:

Post a Comment