Wednesday 23 July 2014

குரு - சீடன்....4

இதோ இந்த திரவம் இருக்கிறதே அது எத்தகைய பொருளையும் கரைத்து விடும் தன்மையைக் கொண்டது” என்றபடி திரவம் நிறைந்த ஒரு குடுவையை எடுத்து சீடர்களின் முன்னால் வைத்தார் குரு.

சீடர்கள் பயத்தில் சற்றே தள்ளி அமர்ந்தனர். 

“”இதை உங்கள் முன் தெளிக்கப் போகிறேன். யார் கரையாமல் இருக்கிறீர்களோ அவர்களே சிறந்த சீடன்” என்றார்.

 மாணவர்களுக்கு அச்சம் மேலும் அதிகமானது. ஒரு மாணவன் மட்டும் தைரியமாக குடுவையை நோக்கி வந்தான்.

“”ஏன் உனக்கு பயமில்லையா?” என்றார் குரு.


மாணவன் கேட்டான்: “”எல்லாவற்றையும் கரைத்து விடும் திரவம் இந்தக் குடுவையைக் கரைக்காதது ஏன்? அப்போதே பாதி பயம் போய் விட்டது. எங்கள் மீது தெளிக்கப் போவதாகச் சொன்னதும் மீதி பயமும் போய் விட்டது” என்றான்.

குரு அவனையே முதன்மைச் சீடனாகத் தேர்வு செய்தார்.

No comments:

Post a Comment