Friday 13 February 2015

மூளைக்கு வேலை - 47

படத்துக்கு ஏற்ற பழமொழி

யானைக்கும் அடி சறுக்கும்

இதே மாதிரி கீழே உள்ள மற்ற 15 படங்களுக்கும் பழமொழியை கண்டுபிடிக்க வேண்டும்.


1.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 
2.ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்
 3.கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்

4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

5. டில்லிக்கு ராஜாவனாலும் பள்ளிக்கு பிள்ளைதான்
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
9. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
10. வீட்ல எலி; வெளில புலி
11. விடிய விடிய கதை கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.
14. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15. பணம் பத்தும் செய்யும்.


No comments:

Post a Comment