Tuesday 5 April 2022

சிரிப்பு ஞானம்

 90 KIDS JOKES


"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"



நீதிபதி: பட்டப் பகல்ல ஏன் திருடினே?
திருடன்: தொழில்னு வந்துட்டா ராத்திரி, பகல்னு பார்க்க முடியுமா.. எஜமான்!

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

ஒரு சர்தார்ஜி பால்கனில வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ ஒருத்தன் ஓடிவந்து 
பூட்டாசிங் உன் தம்பிஆக்ஸிடன்ட்ல பூட்டான்ன்னான்.
தம்பியே செத்துட்டான் இனி எனக்கென்னன்னுபொசுக்குன்னு மாடில இருந்து குதிச்சிட்டார்.பாதி வழில ஒருபைப்பை புடிச்சுக்கிட்டு''ன்னு அழ ஆரம்பிச்சார்.மாடில தகவல்சொன்னவன் ஏன்யா அழறன்னுகேட்டான்,இவரு,எனக்குதம்பியே இல்லைப்பா,இவ்ளோ முட்டாளா இருக்கேனேன்னு திரும்ப குதிச்சார்.ஆனா காயத்தோடதப்பிச்சிட்டார்திரும்ப 'ன்னு அழ  ஆரம்பிச்சார்.
இப்ப ஏன்யா அழற
நான் பூட்டாசிங்கேஇல்லைப்பா

நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

என்னுடைய அலாரக்கடிகாரம் முதல்முறையாக இன்று என்னை எழுப்பியது.
எப்படி?
என் மனைவி அதைக்கொண்டு என் மண்டையில் ஓங்கி ஓர் அடி கொடுத்தாள்.

வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!


நிருபர்: நீங்க சமீபத்திலே நடிச்சு வெளிவந்த பயங்கரப் படத்தைப் பார்த்தேனுங்க.
நடிகை: அது பயங்கரப் படம் இல்லேங்க. நான் மேக்கப் இல்லாம நடிச்ச முதல் படம்

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.


உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?
கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

நண்பர் 1: என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? 
நண்பர் 2: நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

நண்பர் 1: எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...
நண்பர் 2: எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.

நண்பர் 1: உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? 
நண்பர் 2: அது 'ஈஸி' சேராச்சே!

சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும்விமானத்தில் ஏறுகிறார்.மூன்று சீட் உள்ள
  வரிசையில்அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆனால் ஜன்னலோரம்  
இருந்த சீட்டில் உட்கார்ந்துகொண்டார்அது ஒருவயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்கஅந்தப்பெண்மணி தன்னுடையசீட்டை தனக்குவிட்டுத்தருமாறு கேட்கிறார்.

சர்தார் : அதெல்லாம்முடியாதுநான் வெளியேவேடிக்கை பாத்துக்கிட்டுதான்வருவேன்.
 ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அதுமுடியும்.
பெண்மணி:பணிப்பெண்ணிடம், எனக்கு என் சீட்டை ஒதுக்கிக்கொடுங்க.இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.
பணிப்பெண்:சார் தயவுசெய்து இவுங்களுக்குஅந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல 
உட்காருங்க.
சர்தார் : அதெல்லாம்முடியாதுநான் வெளியேவேடிக்கை பாத்துக்கிட்டுதான்வருவேன்
ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அதுமுடியும்.
விமான துணை கேப்டன் :சார் தயவுசெஞ்சி சீட்டவிட்டுக்கொடுங்க சார்.கெஞ்சிக் 
கேக்கிறேன் சார்.
சர்தார் : அதெல்லாம்முடியாதுநான் வெளியேவேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன்.
 ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அதுமுடியும்.

கேப்டன் வருகிறார்நடந்தவிபரங்களைக் கேட்கிறார்.சர்தார்ஜியின் காதில்மெதுவாக
 எதையோகூறுகிறார்அதிர்ந்துபோன சர்தார் தன்னுடைய சீட்டுக்குமாறிக்கொள்கிறார்.ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்னசொன்னீர்கள் எனக் 
கேட்க,அவர் பதிலளிக்கிறார்.ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட்
 மட்டும்தான் சண்டிகர் போகும்மற்றசீட்கள் எல்லாம் குஜராத்போகும்னு சொன்னேன்.
அவ்வளவுதான்.







No comments:

Post a Comment