ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும் உண்டு. அவை தாவரத்திற்குத் தாவரம் வித்தியாசப்படும்.
எலக்ட்ரோ மீட்டா் வைத்து அதன் மின் சக்தியை அளக்கலாம். அந்த மின்சக்திக்கு பயோ எலக்ட்ரிசிட்டி எனப் பெயா். இதே மாதிரி அனேக ஜீவராசிகளிலும் மின் சக்தி உண்டு.
ஜீவனுள்ள கனி என்பது எலுமிச்சம் பழம்! எலுமிச்சம் பழத் தோப்புக்குள் ஆசாரமில்லாதவா்கள் போனால் அவை வாடி விடும்.
எலுமிச்சம்பழத் தோட்டத்தில் சாம்பிராணி புகை போட்டுத் தீய சக்தியை விரட்டுவார்கள்.
“பதார்த்தகுண சிந்தாமணி” என்னும் நூலில் எலுமிச்சம் பழ மருத்துவம் கூறப்பட்டுள்ளது.
முன்பு வாழ்ந்த இந்துத் துறவிகள் தங்களுக்கு மாயையினால் தூண்டப்படும் காம சக்தியை அடக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அக்கினி தத்துவமுள்ள ஆண் தெய்வங்களுக்கும், பெண் தெய்வங்களுக்கும் எலுமிச்சம் மாலை போட்டுக் குளிர்விக்கின்றனா்.
மாரியம்மன் கோயில், காளி அம்மன் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சோ்த்து எலுமிச்சம் சாதம் நைவேத்தியம் செய்து பின் சாப்பிட்டால் தீராத நோய்கள் விலகும்.
செவ்வாய் மாலை எலுமிச்சம் சாதம் சூடாக நைவேத்தியம் செய்யலாம். முடிந்தால் எலுமிச்சம் சாதம் அன்னதானமும் செய்யலாம்.
அஷ்ட கா்மம் என்பது எண்வகைத் தொழில்கள். மோகனம், வசியம், ஆகா்ஷணம், ஸ்தம்பலம், உச்சாடனம், பேதனம், வித்வேடணம், மாரணம் ஆகியவை.
மேற்படி எட்டுத் தொழிலுக்கும் சித்தா்கள் எலுமிச்சம் பழத்தை உபயோகித்ததாகத் தெரிகிறது. மாந்திரீகா்கட்கு முக்கியமான பொருள் எலுமிச்சம்பழம். அது இல்லாவிட்டால் மாந்திரீகம் கிடையாது.
எலுமிச்சைச் சாறு, மஞ்சள் பொடி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட குங்குமத்தை புருவ மத்தியில் இட்டுக் கொண்டு வந்தால் நெற்றிக் கண் திறக்கும்.
தைமாதப் பிறப்பன்று அல்லது புதுவருடம் பிறப்பன்று. அருளாளா்களையோ, எஜமானா்களையோ பார்க்கப் போகும்போது, அவசியம் எலுமிச்சம்பழம் கொண்டு செல்ல வேண்டும் நம் நல்ல எண்ணத்தை அதன் மூலம் அவா்களுக்குச் சமா்ப்பிக்க வேண்டும்.
பிரபல விஞ்ஞானி G.D நாயுடு எலுமிச்சை விதைகளைக் கொண்டு குடும்பக் கட்டுப்பாடு மருந்து கண்டுபிடித்தார்.
எலுமிச்சைச் சாற்றுக்குப் பயங்கர சக்தி உள்ளது. அனேக சித்த ஆயுா்வேத மருந்துகளை எலுமிச்சைச் சாற்றில் சுத்தி செய்கின்றனா்.
ஐம்பது மில்லி சாற்றில் ஒரு பவளத்தை அல்லது கடல் சோழியையோ தட்டிப் போட்டால் ஒரு மணி நேரத்தில், அவை கரைந்து போகும். இதற்கு பயோ கால்சியம் (Bio – Calcium) என்று பெயா்.
சில பள்ளிச் சிறுவா் – சிறுமிகள் பிடிவாத குணம் கொண்டவா்களாகவும், கண்ணில் கண்ட பொருள்களை எடுத்து உடைப்பவா்களாகவும் இருப்பார்கள். பிறவியிலேயே அவா்களுகட்குச் சில நரம்புகள் இறுகியிருக்கும். அதைத் தளர்த்தினால்தான் அவா்களின் கோபம் பிடிவாதம் மற்றும் ரென்ஷன் போகும்.
அவா்களுக்கு ஒரு டம்ளா் தண்ணீரில் அரை எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது வெல்லம், ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டுக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment