Tuesday, 28 June 2022

தண்ணீர் எப்படி குடிப்பது ?

 


தண்ணீரை குடிக்கக்கூடாது, சப்பி சப்பி சாப்பிட வேண்டும்.

தண்ணீரை சாப்பிட வேண்டும். உணவை குடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது. உணவை வாயில் வைத்து நன்றாக மென்று கூழ் போல’ செய்து நிராகாரமாக மாற்றி குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரை மெதுவாக உணவு சாப்பிடுவதைப் போல சப்பி சப்பி சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரில் ஆறு சுவைகள் உள்ளது தண்ணீரை மெதுவாக சப்பி சப்பி குடிப்பது மூலமாக நம் உடலுக்கு தேவையான ஆறு சுவைக்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தண்ணீரில் உமிழ் நீர் கலந்து வாயில் உள்ள நொதிகள் கலந்து உள்ளே செல்வதால் நம் உடலுக்கு பல விதமான நம்மைகள் ஏற்படுகிறது. மேலும் தண்ணீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் மற்றும் தண்ணீரை நமது உடல் வெப்ப நிலைக்கு மாற்றுவதற்கும் டான்சில் எனப்படும் உறுப்பு உதவி செய்கிறது. வேகமாக அன்னாந்து கடகடவென தண்ணீர் குடிப்பவர்களுக்கு இந்த தண்ணீர் டான்சில் எனப்படும் உறுப்பில் நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தண்ணீர் வேகமாக டான்சில் வழியாக கடக்கும்போது டான்சில் வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறது. எனவே அதில் நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. தண்ணீரை எவ்வளவு மெதுவாக குடிக்கிறோமோ அவ்வளவு தூரம் நம் உடலுக்கு ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும். டான்சில், வீசிங், நெஞ்சு சளி போன்ற நுரையீரல் சம்மந்தப்பட்ட மூக்கு சம்மந்தப்பட்ட சைனஸ் போன்ற எந்த வியாதிகயும் நமக்கு வராது. வந்தால் அது உடனே குணமாகிவிடும். எனவே தண்ணீரை மெதுவாக சப்பி சப்பி சுவையை ரசித்து குடிக்கலாம்.


No comments:

Post a Comment