Monday, 6 June 2022

பிராணன்

 


உலகில் செயல்படும் சக்திகள் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பதுவே பிராணன்.

மனித உடலில் பிராணனின் ஸ்தூல வடிவமே சுவாசம்.

இது மனித உடலில் தலையில் உள்ள பிரம்மாந்திரம் என்னும் உச்சிக்குழியினூடாகவும், யோக சித்தி பெற்றவர்களுக்கு ஆறு ஆதாரங்கள் ஊடாகவும் சூஷ்ம உடலில் ஏற்கப்பட்டு, பின் ஸ்தூல உடலில் உள்ள 72000 நாடிகளூடாக உடலுறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது. 

பிராணன் என்பது ஒருவித மின் காந்த சக்தி, அது செல்லும் இடங்களில் உள்ள தகவல்களை எடுத்து செல்லும், அதாவது நல்லது, கெட்டது என்பதில்லை. 

மனதின் தன்மைக்கு ஏற்றவகையில் பிராணனின் தன்மையும் மாறும். ஒருவருடைய பிராணசக்தி அவரது எண்ணம், நம்பிக்கைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றுடன் கலந்து அவற்றை வலுப்படுத்தும். அதேபோல் பிராணசக்தியுடன் கலந்து அன்பு, எண்ணங்கள், நம்ம்பிக்கைகள், உணர்ச்சிகளையும் செலுத்தலாம். 

எம்மை சுற்றியுள்ள அனைத்திலிருந்தும் பிராண சக்தியினை நாம் உறிஞ்சுகிறோம், அதேபோல் இழக்கிறோம். இது அந்த இரு பொருட்களுக்குமிடையிலான சக்தி அளவு விகிதத்தினைப் பொறுத்தது. கூடியதிலிருந்து குறைந்ததிற்கு சக்தி பாயும் என்பது இயற்கை விதி.

ஒருவன் தனது தியான சக்தி, பிராணாயாமம், ஆசனங்கள், வர்ம புள்ளிகளை அழுத்துதல் போன்றவற்றால் பிராணசக்தியினை சீர் செய்து கொள்ளலாம். 

இது பஞ்ச பூதங்களாலும் இடகலை, பிங்கலை நாடிகளால் சமப்படுத்தப்படுவதுடன், யோக நிலையில் சுழுமுனை வழியாக பாயும். 

இந்திய யோகப்பயிற்சி, கடவுள் வழிபாட்டில் உள்ள பூஜைமுறைகள், ஜெபம், தெய்வ சாதனைகள், பிராணபிரதிஷ்டை சடங்குகள், கோயில் வழிபாட்டு முறைகள் எல்லாம் இந்த பிராண சக்தியினை சேமித்து தம்மில் பெறுவதற்கான ஏற்பாடுகள் தான்.  இவை எதுவும் மூட நம்பிக்கைகள் அல்ல. 

இந்த பிராண இயக்கத்தின் தடையே நோயாகும். இந்த தடைகள் மனம்,உணர்ச்சிகள், வெளிப்புற பௌதீக பாதிப்புகள், எண்ணங்கள், சூழல் என்பவற்றால் வரலாம். 

நன்றி - இணைய தளம் 

No comments:

Post a Comment