Monday, 6 June 2022

தமிழ் மொழி


 உலகில் மிக பழமையான மொழிகளை வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். 

உலகளவில் சுமார் 6000 மொழிகள் பேசப்படுகிறதாம்.  ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. 

உலகளவில் பத்தாவது இடத்தில் இருக்கிறது லத்தீன் மொழி.  ரோம் சாம்ராஜ்யத்தில் லத்தீன் மொழி பரவலாக பேசப்பட்டதாக ஆய்வுகள் சொல்கிறது.  அது கிமு 75ம் ஆண்டு அளவுகளில் தோன்றி இருக்கலாம்.

ஒன்பதாவது இடத்தில் ஆர்மேனியன் மொழி இருக்கிறது.  இந்தோ ஐரோப்பிய மொழியாக கருதப்படும் ஆர்மேனியன் கிமு 450 கால அளவில் தோன்றியிருக்கலாம் என்று வரிசைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள்.

கொரியன் மொழி இந்த வரிசையில் எட்டாம் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட கிமு 600 ஆண்டுகள் அளவில் கொரியன் மொழி தோன்றி வளர்ந்திருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

எபிரேய மொழியானது ஏழாம் இடத்தில் இருக்கிறது.  இஸ்ரேலில் அரசு மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் உள்ள இது கிமு 1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள் மொழி ஆய்வாளர்கள்.

அராமிக் என்ற மொழியானது இதே கிமு 1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.  அரபு மொழிக்கும், எபிரேய மொழிக்கும் அடிவேராக இருக்கிறது அராமிக்.  இது மொழி அட்டவணையில் ஆறாமிடத்தில் உள்ளது.

சைனீஸ் என்று சொல்லப்படுகிற சீனமொழி ஐந்தாம் இடத்தை பெறுகிறது.  கிமு 1200 ஆண்டுகள் பழமையானது என்கிறது புள்ளி விபரம். சீனர்களாலும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களாலும் பேசப்படுகிற மொழி.

கிரேக்கத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பேசப்படுகிற தொன்மையான மொழி கிரீக்.  இதன் தோற்றக்காலம் என்பது கிமு 1450 ஆக இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இது நான்காமிடத்தில் இருக்கிறது.

ஆப்ரோ ஆசிய மொழியாக கருதப்படும் எகிப்திய மொழியானது இந்த அட்டவணையில் மூன்றாம் இடத்தை பெறுகிறது.  கிமு 2600 ஆண்டுகள் பழமையானது.

இந்தியாவில் உருவான சமஸ்கிருதம் பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது.  ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டது. கிமு 3000 ஆண்டுகள் என்ற அளவில் தோன்றி இருக்கலாம் என்பது ஒரு கருத்து.

நாம் பேசும் தமிழ் மொழியானது கிமு 5000 ஆண்டுகள் பழமையாக, உலகெங்கும் 6000 மொழிகள் பேசப்படுகிற நிலையில் முதல் இடத்தில் இருக்கிறது. 

உலகில் தோன்றிய முதல் மொழியாக தமிழ்தான் உள்ளது.  பிராமி என்னும் அரிச்சுவடியாக தோன்றி, அர்வி என்னும் அப்ஜதிய்யாக வளர்ந்து, பிரெய்லி என்று வழங்கப் பெற்று வட்டத்தெழுத்துக்களாக வடிவம் பெற்று வளர்ந்த மொழிதான் தமிழ்.

இன்று உலகம் முழுவதும் 80கோடி மக்களுக்கு தாய்மொழியாக இருப்பது தமிழ். ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டு பேசப்படும் வரிசையில் 18ம் இடத்தில் இருக்கிறது.  

No comments:

Post a Comment