Sunday, 26 June 2022

ஆன்மா



யுகங்களை கடந்ததாக உள்ள ஆன்மாவை அறிதல் யாவராலும் சாத்தியமில்லை , அறிதலுக்குரிய அனுமதி பெற்ற ஜீவனே ஆன்மாவை அறிய முடியும். மேலும் எல்லோரும் அறிந்து ஆவது ஒன்றுமில்லை . உணர்ச்சி வசப்பட்டு ஒருநாள், ஒருமணி நேரம் பேசுவார்கள் நான் கண்டேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். அப்புறம் அவர்கள் வேலையில் மூழ்கிப்போவார்கள் . அதனால்தான் அது இரகசியமாக்கப்பட்டுள்ளது.

ஒரு நொடியும் விடாத , இடைவிடாத , இறைநினைவில் , இறை சிந்தனையில் , இறையுணர்வில் வாழ வேண்டும்.
தன்னை , தன்நினைவை மறந்து இறையுணர்வில் மூழ்கவேண்டும்.
இறை , மனித நிந்தனையற்ற , குற்றம் காணாத , மேல் கீழ் என பாகுபாடு பார்க்காத சர்வமும் சிவமே எனும் மெய்யுணர்வில் ஒன்றி தன்னை இயற்கையிடம் ஒப்புவிக்க வேண்டும்.
ஜபம் , தவம் , த்யானம் , யோகம் மூலம் தன்னை அறிதல் வேண்டும்.
தன்னை முழுக்க அறிந்தவர்கள் , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள்,சித்தர்கள் ஆவார்கள். இதுவே பிறப்பெடுத்தவர்களுக்கு இறைவனால் (இயற்கையால்) தரப்படுகின்ற பேரருள் நிலை . (அதற்கு தான் இந்த போராட்டம் )
குறைவின்றி எப்பிறப்பும் இல்லை , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோரும் குறைபாடுள்ளவர்களே , அவர்கள் தங்களின் குறைபாடுகளை கலைந்ததனால் உயர்ந்து அந்நிலையை அடைந்தார்கள் .
(அவர்கள் குறைபாடு என்பது மனிதர்களின் குறைபாடு போல அல்ல , குழப்பம் வேண்டாம்)
தன்னை கொஞ்சமும் குறைவின்றி முழுமையாக அறிந்தவன் – ஆன்மாவை அறியும் ஆற்றலை அடைகிறான்.
ஆன்மாவை அறிந்தவன் – அகிலம் முழுவதும் செயல்படும் செயலாற்றலை அறிந்தவனாகின்றான் .
ஆன்மாவை அறிந்தபின் அறிந்துகொள்ள வேறொன்றும் இல்லை.
அதுவே பிரபஞ்ச ரகசியம். அந்த இரகசியத்தை அறிந்தவன் எவனோ
அவனே யோகிகளின் தலைவன், அவனே ஞானிகளின் தலைவன், அவனே ரிஷிகளின் தலைவன் , அவனே சித்தர்களின் தலைவன் , அவனே இயற்கை, அவனே இறைவன்

No comments:

Post a Comment