The Palani Temple deity is made of NavaPashanam (A concoction of 9 poisons). When people consume the water flowing out of this deity, it leads to good health.
So even poisons can be used for well-being.
This is how the Yogic Sciences look at things. Not as good or bad but as how to use something for human well-being.
நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும்.பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம். இதில் நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடிய தன்மையுடையது. நவபாஷாணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு....
சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து, மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்... 1.சாதிலிங்கம். 2.மனோசிலை 3.காந்தம் 4.காரம் 5.கந்தகம் 6.பூரம் 7.வெள்ளை பாஷாணம் 8.கௌரி பாஷாணம் 9.தொட்டி பாஷாணம்
இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. .நவபாஷாண கட்டு என்பது சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.
தமிழ் நாட்டில் 4 இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில். சிவகங்கையில் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ள நவபாஷாண பைரவர் மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.
மூன்றில் இரண்டு சிலைகள் போகர் உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டிணத்தில் இருக்கும் மற்றொன்றை யார் உருவாக்கினர் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment