- எந்த ஒரு வார்த்தையும் சரியான நேரத்தில் சரியான மனிதரிடம் மொழியும் போது அவர்களிடத்தில் ஒரு தாக்கம் ஏற்பட தான் செய்கிறது.
- நாம் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கும் நம்முடைய உணர்வுகளுக்கும் எக்கச்சக்க தொடர்பு உள்ளது - உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும்!!
- நாம் பேசும் வார்த்தைகள் conscious mind (வெளியுணர்வு) மற்றும் sub-conscious mind (உள்ளணர்வு) ஆகியவற்றில் தான் சேமிக்கப் படுகின்றன. நம்முடைய உள்ளணர்வு நாம் உபயோகப்படுத்தும் அல்லது பிறர் நம்மிடம் சொல்லும் சொற்களை உண்மை என்று தனக்குள் அப்படியே ஏற்கிறது. இது தான் வெளியுணர்வுக்கும் உள்ளணர்வுக்கும் உள்ள வித்தியாசம் கூட.
- பெரும்பாலும் நாம் எல்லாருமே உள்ளணர்வு சொல்படி கேட்டு நடப்பவர்களாக இருப்போம். சரி தானே? அப்படியென்றால் அந்த உள்ளணர்விற்கு நாம் பாசிட்டிவ் மற்றும் நம்பிக்கை தரும் விஷயங்களை புகுத்த வேண்டும் தானே? அதற்கு தான் நாம் பேசும் / கேட்கும் வார்த்தைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன :)
- இப்படியிருக்க , ஒரே ஒரு வார்த்தையால் மற்றவரின் வாழ்க்கையில் நல்லது நடக்க நீங்கள் காரணமாக இருப்பீர்களென்றால் அந்த வார்த்தையின் சக்தி எவ்வளவு என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
- மனதை நேர்மறை எண்ணத்தை ஊட்டும் எந்த ஒரு வார்த்தையும் சக்தி வாய்ந்த வார்த்தை தான். எனக்கு - "வாழ்க வளமுடன்"
பிளாசிபோ
பிளாசிபோ என்பது போலி மருந்து அல்லது வெற்று மருந்து. இந்த மருந்து எந்த வித மருத்துவ பண்பும் இல்லாத ஒரு சடத்தன்மையான மருந்து. நோயாளிகளுக்கு அதை பற்றி உண்மையை கூறாமல் இருந்து அவர்கள் அதை உட்கொள்ளும்போது அந்த மாத்திரையின் மேல் இருக்கும் நம்பிக்கை நோயாளிக்கு மனநிறைவு தந்து உளவியல் மாற்றத்தால் அவருடைய உடல்நிலை சரியாகிவிடும். இதன் அடிப்படை தான் இந்த பிளாசிபோ!
No comments:
Post a Comment