Monday, 1 January 2024

சோழியன் குடுமி

 சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் இனமானது தமிழைத்

 தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும்.

இவர்கள் பண்டைய சோழ தேசமான இன்றய டெல்டா பகுதி என்றழைக்கக் கூடிய தஞ்சை திருவாரூர்நாகப்பட்டினம்திருச்சி ஆகிய மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டதால் சோழ வெள்ளாளர், சோழ வேளாளர், சோழிய வெள்ளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். சோழிய வெள்ளாளர் நிலவுடமையாளராக இருந்துள்ளனர். இவர்கள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் போன்ற பொறுப்புகளில் இன்றுவரை விளங்கி வருகின்றனர்.

சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள். பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையைச் சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள்.

இதற்கு சும்மாடு என்று பெயர். (பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும்).

ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது. ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி ‘சும்மாடு’ ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.

தலையில்  சுமை தூக்கும் போது தலையில் கனம் அழுந்தாமல் இருக்க, துணியை உருட்டி தலையில் வைத்து அதன் மேல் சுமையை வைப்பர். இவ்வாறு உருட்டி வைக்கப்படும் துணி சும்மாடு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பையும் ஆண்கள் தங்கள் துண்டையும் சும்மாடாகப் பயன்படுத்துவர். சங்க இலக்கியங்களான கலித்தொகையிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் இது சுமடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது எனும் பழமொழியே இன்று திரிந்து "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று வழங்குகிறது.

No comments:

Post a Comment