Friday, 12 September 2025

கஞ்சத்தனத்துடன் வாழ்வது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்ல!

  1. 1.மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி முடி வெட்டுங்க,,,, ( எனக்கெல்லாம் முடியே வளர மாட்டிக்கிது!)
  2. சீக்கிரமா கரையாத சோப்பு போட்டு குளிங்க,,,, ( ஆரோக்கியம் காக்கும் லைஃப் பாய் - பழையது!)
  3. வாரத்துக்கு ஒரு வாட்டி மொத்தமா துணிய துவய்ங்க,, ( சோப்பு மிச்சம், தண்ணி மிச்சம் )
  4. சொந்தம் பந்தம், நண்பர்கள் யாரையும் வீட்டுக்குள்ள சேர்க்காதீங்க !(What's ஆப் status நாங்க வெளியூரில் இருக்கோம் என்று போடுங்க!)
  5. 2 நாளைக்கு ஒரு தடவை பால் வாங்குங்க,, (தண்ணீர் தாராளமா ஊற்றி கொள்ளுங்க)
  6. ஒரு முறை சமையல் செஞ்சு ரெண்டு மூணு நாள் fridgeல வெச்சு சாப்பிடுங்க… ( ஒரு சாம்பார், ஒரு பொறியல் மூன்று நாள்! )
  7. பிள்ளைகளை goverment ஸ்கூல்ல சேத்து விடுங்க ( சாப்பாடு செலவு மிச்சம் ).. ( பின்னாடி டாக்டர் சீட்டு கிடைக்கும் நம்புங்க)
  8. பிறந்தநாள், பண்டிகைக்கு குடும்பத்தோடு அம்மா உணவகுத்துல மூணு வேலையும் treat குடுங்க..( அம்மா உணவகத்தை அப்பா விட்டு வைத்திருக்காரா கேட்டு விட்டு போங்க !)
  9. வெளியூர் போகும் போது முன் பதிவு இல்லாத ரயிலில் பயணம் செய்யுங்க….( ரெண்டு மணி நேரம் முன்னாடி போய் உட்கார்ந்து கொள்ளணும்)
  10. புகை பிடிப்பவர்கள் ஒரே சிகெரட் ஐ அணைத்து அணைத்து ஒரு நாள் புல்லா குடிங்க….( பீடிக்கு மாறினால் கூட ஓகே தான்!)
  11. மினிமம் ரீசார்ஜ் செய்து எல்லாருக்கும் மிஸ்ட்டு கால் குடுங்க…( தேவை என்றால் அவங்க கூப்பிடுவாங்க இல்ல!)
  12. துணியை ஐயன் பண்ணாமல் படுக்கை மெத்தை அடியில் வையுங்க ( பெட்டி இருந்தால் அதன் அடியில் கூட வைக்கலாம்)
  13. ரேஷன் அரிசி சாப்பிடுங்க,,,,,( அட நீங்க கடையில் வாங்கும் தோசை மாவு அந்த அரிசி தான் )
  14. அலுவகத்தில் குடுக்கும் டீ காபி நிறைய குடிங்க அப்போதான் பசிக்காது,,( அப்படியே பிஸ்கெட், சமோசா கொடுத்தால் விடாதீங்க !)
  15. ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு லிப்ட் கேட்டு கேட்டு வாங்க அப்போதான் பெட்ரோல், பஸ் காசு மிச்சம் ஆகும்( அப்படியே கொஞ்சம் நடந்த மாதிரி இருக்கும் )
  16. எப்போதும் சில்லறை மட்டும் purse லே வைச்சிக்கோங்க ரூபாய் நோட்டு வெக்காதிங்க,,( ஒன்லி கிரெடிட் கார்டு தான் எப்பவும் அள்ளி விடுங்க )
  17. டீ கடைல போய் பேப்பர் படிங்க,,,,,( அட யாராவது ஓசி டீ வாங்கி தருவாங்க!)
  18. குழம்பு வெக்கணும் அப்படினா தெருக்களில் முருங்கை இலை ஓசி லே பறிச்சு குழம்பு வெய்யுங்க ( அட முருங்கை இரும்பு சத்து அதிகம் சார்)
  19. குழந்தைகளுக்கு வீட்டில் வைத்து நீங்களே முடி வெட்டி விடுங்க,( ஹோம் டிசைனர் என்று சொல்லுங்க )
  20. தண்ணி கேன்க்கு பதில் கார்ப்பொரேஷன் தண்ணில துணிய போட்டு பில்டர் செய்து குடிங்க,,,,( அட RO water கெடுதி என்று சொல்றாங்க )
  21. விடிய காலை நான்கு மணிக்கு fan off பண்ணிடுங்க,,,( அட இப்ப மழைக் காலம் தானே)
  22. கிட்சன்ல மட்டும் tubelight போட்டு மற்ற அறைகளில் ஸிரோ வோல்டஸ் பல்பு போடுங்க,,,( மனைவி கிட்ட பெர்மிஷன் வாங்கிக்கோங்க பல்பு வாங்காதீங்க)
  23. சினிமா தியேட்டர்ல படம் பாக்க போகாதீங்கஅந்த படம் சன் டிவி ல போடும் போது பார்த்துக்கலாம்,,,( உடனே உடனே வருதாம்! பாப்கார்ன் செலவு மிச்சம்)
  24. பீச் க்கு போகும் முன்பு நம் வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் 200gm உடைத்த கடலை, வேறு கடலை வாங்கிக்கோங்க,, மிதி இருந்தா வீட்டுல வெச்சு ரெண்டு மூணு நாள் சாப்பிடுங்க..
  25. குறைந்த தூரம் என்றால் செருப்பு போடாமல் போங்க அப்போ தான் செருப்பு தேயாது,,,,( இது அக்கு பஞ்சாரம்)
  26. அன்னதானம் எங்க எங்க போடுறாங்கனு தெரிஞ்சு வெச்சுக்கோங்க,,,,( அட கொடுப்பவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் இல்ல)

மொத்ததில் உங்களை பார்த்தாலே மற்றவர்கள் தல தெறிக்க ஓடணும்

போதும்ணு நினைக்கிறேன்...!

No comments:

Post a Comment