Tuesday, 25 November 2025

என் மனைவி ஒரு தீர்க்கதரிசி..

 

ஒருவன் மாலை வேலை வேலை முடித்து வீடு கிளம்ப தயாரானான் .

வழக்கம் போல் வழி மரித்த அவன் நண்பன் !!!!

" என்னப்பா வழக்கமா போடுற கட்டிங் போடாம போறே !வா "

என்று அழைத்து சென்றான் .

செவ்வனே கட்டிங்கை முடித்து வீடு செல்ல தயாரானான் . சட்டென்று அவனுடைய செருப்பின் வார் அறுந்தது .

உடனே அவன் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டான் .

அவனை தேற்றிய நண்பன் என்னப்பா செருப்புதானே அறுந்தது அதற்க்கு ஏன் இப்படி !!!!!

அதற்க்கு அவன் சொன்னான் "என் மனைவி ஒரு தீர்க்கதரிசி !!!!!!!காலையிலே அவங்க சொல்லித்தான் அனுப்பினாங்க !!!! சாயந்திரம் வேலை விட்டு நேரா வீட்டுக்கு வராம ! சரக்க அடிக்க போனா !கட்டாயம் செருப்பு பிஞ்சிடும் ! என்று!!!1 பாரு அவ சொன்ன மாதிரியே பிஞ்சு விட்டது !!!!!

( பாவம் அவனுக்கு தெரியாது வீடு சென்றவுடன் மற்ற செருப்பும் பிஞ்சிவிடும் என்று !!!!!அப்பாவி !)

No comments:

Post a Comment