நாட்டில் குறை சொல்வதில் யார் சிறந்தவன்?
ஒரு நாட்டில் மன்னனுக்கு ஒரு வித்தியாசமான யோசனை வந்தது . அதாவது நம் நாட்டில் யார் அதிகப்படியாக குறை சொல்வதில் கில்லாடி என்று கண்டு பிடிக்க வேண்டி அமைச்சரிடம் சொல்ல .
அமைச்சரும் நாட்டில் குறை சொல்லும் சிறந்த ஆசாமிகளை அரண்மனைக்கு வரவழைத்தார்கள். மன்னர் ஏற்கனவே உத்தரவு போட்டு இருந்தார் . அதாவது குறை சொல்லும் நபர்கள் சந்திப்பில் எல்லா உபசரிப்பும் தட புடலாக இருக்கணும் யாரும் குறையே சொல்லாத மாதிரி இருக்கணும் என்று ஆணை இட்டு இருந்தார்;
முதலில் வந்த குறை சொல்லும் ஆசாமிகளை வரவேற்று பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பூ மாலைகளை வந்தவர்களுக்கு போட! அனைவரும் மலர்களின் வாசத்தில் சொக்கி போய் இருக்க ஒரே ஒருவன் மட்டும் மன்னா எனக்கு போட்ட மாலை நாற்றம் தாங்க முடியவில்லை என்று சொல்ல ! மன்னன் உடனே அவனுக்கு போட்ட மாலையை சோதிக்க எதுவும் கண்டு பிடிக்க முடிய வில்லை ! கடைசியாக ஒரு சிறிய பூவில் ஒரு ஈ இறந்து போய் இருந்தது.
மன்னர் பேஷ் ! இவன்தான் நம் நாட்டில் சிறந்த குறை சொல்லும் ஆள் என்று முடிவு எடுக்க சரி இன்னும் பார்க்கலாம் என்று அடுத்து விருந்துக்கு அழைத்து சென்றார். விருந்து தடபுடலாக இருந்தது எல்லாரும் விருந்தில் சொக்கி போய் இருக்க ஒருவன் மட்டும்
மன்னா இந்த உணவில் சுடுகாட்டு பிணம் எரிக்கும் வாடை வருகிறது என்று ஒருவன் சொல்ல ! மன்னன் அதிர்ச்சியில் என்னவென்று விசாரிக்க!
அந்த விருந்தில் தயாரிக்கப்பட்ட சாதம், நெல் விளைவித்த விவசாயி மன்னனிடம் மன்னா என் நிலத்திற்கு பக்கத்தில் ஒரு சுடுகாடு இருக்கு! அங்கு இருந்து சாம்பல் எடுத்து உரமாக என் நிலத்தில் போட்டேன் என்றான்!
மன்னன் பேஷ் ! பேஷ் இவன் தான் நம் நாட்டில் சிறந்த குறை சொல்பவன் என்று சொல்ல சரி இன்னும் பார்ப்போம் என்று வந்தவர்களை அரண்மனையில் விலை உயர்ந்த மஞ்சத்தில் உறங்க வைக்க! அனைவரும் சொர்க்கத்திற்கு சென்றனர்!
ஒருவன் மட்டும் தூங்காமல் மன்னனிடம் வந்து மன்னா என் படுக்கையில் கீழே கடப்பாரை வைத்து இருக்காங்க என்று சொல்ல!
பணியாளர்கள் படுக்கையை பிரித்து அங்குலம் அங்குலமாக சோதிக்க ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை!
கடைசியில் மஞ்சத்தில் ஒரு பெண்ணின் கூந்தல் முடி இருந்தது!
மன்னன் முடிவு செய்தான் இவன் தான் நம் நாட்டில் சிறந்த குறை சொல்பவன் என்று!
மற்றவர்கள் இருவரும் முழித்து கொண்டு இருக்கும்போது குறை கண்டு பிடித்தார்கள்! ஆனால் கடைசியாக வந்தவன் தூங்கும் போது குறை கண்டுபிடித்தான்!
அவன் தான் வெற்றியாளன் என்று அறிவித்தார்.
No comments:
Post a Comment