Wednesday, 17 December 2025

அம்மாவின் ஆத்மா சாந்தி.அடையட்டும்

83 வயதான அம்மா இறைவனடி சேர்ந்தாரகள். ஆசாரமான குடும்பம். தகனம் முடிந்தது

அம்மாவின் படத்தின்‌ முன் எல்லாம் படைக்கப் பட்டது. பின் மகன் ராஜேஷ் அந்த இலையை மொட்டை மாடியில் வைத்து நமஸ்கரித்து அம்மாவை அதை ஏற்கும்படி மனம் உருக வேண்டினான்.

காக்கைகள் இங்கும் அங்கும் வட்டமிட்டு பறந்தன... ஆனால்‌ இலையின் அருகில் ஒண்ணு கூட வரவில்லை....

அம்மாவிற்கு ஏதோ குறை இருக்கிறது என வாத்தியார்‌ போனில் கூறினார். எத்தனை வேண்டியும் பலனில்லை... காக்கை ஏற்காவிட்டால் நான் ஒரு சொட்டு நீர் கூட குடிக்க மாட்டேன். மகன் உறுதியாக இருந்தான்.. உறவினர்களும் சோர்ந்து போனார்கள்...

அப்போது தான் ராஜேஷின் மனைவி ‌யோசித்தாள். அனைவரையும் வெளியே போகச் சொன்னாள்.. கதவை மூடினாள்....

மாமியார் படத்தின் முன்பு நின்று பத்து நிமிடங்கள் பேசினாள்... அவள் பேசி முடித்த உடனே காக்கைகள் ஒரு பருக்கை கூட பாக்கி வைக்காமல் இலையை காலி செய்தன.. மகன் கண்களில் ஆனந்த கண்ணீர்...

பத்து நாட்களும்‌ இது தொடர்ந்தது.

எல்லாம் நல்ல‌படியாக‌ முடிந்தது...

உறவினர்கள் மருமகளை அப்படி பாராட்டினார்கள்...

ரா‌ஜேஷுக்கு இனி மேலும் பொறுக்க முடியவில்லை. இப்போதாவது சொல்லேன். ‘அம்மாவிடம் என்னதான் பேசின?’ என ஆர்வத்துடன் கேட்டான்...

அப்போது தான் அந்த ரகசியத்தை சொன்னாள்… நானும் உங்க அம்மாவும் பத்து வருஷமா இந்த டீவி சீரியல பார்த்து கொண்டிருந்தோம்.

அந்த சீரியல்ல பத்து நாளா நடந்த கதையைத்தான் நான் உங்க அம்மா கிட்ட சொன்னேன்...

மயங்கி விழுந்த ராஜேஷ் எப்போது எழுந்தான் என்பது எனக்கு தெரியாது


 

No comments:

Post a Comment