Monday, 9 March 2026

வாட்ஸ் அப்பில் யாரோ எழுதியது


கொடுக்கும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !

அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்பா?!

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி சடங்கு ஊர்வலமாய் எடுத்துச் செல்கின்றன..!!!

தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும், அதை பொறுக்கி சுத்தம் செய்பவனைக் கேவலமாகப் பார்க்கும் சமுதாயம் உள்ளவரை எந்த நாடும் சுத்தம் ஆகாது !!!

ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமைகளை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடினா ஊர்ல ஒரு பய இல்ல,

தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுவ !!

இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழறோம். ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதே இல்ல! .... நிதர்சனம்.

இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவனப் பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவனப் பாத்து எதையும் சாப்புடக்கூடாதுனு சொல்லுவான் !!

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

2500 ரூபாய்க்கு பளிச்சென்றும், 1000 ரூபாய்க்கு சுமாராகவும், இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப் படுத்தினார்கள். இப்போதோ வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல்

முதலாளி .....

தூங்கி வழியும்

வாட்ச்மேன.........முரண்.

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால் ... கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும், தோன்றினாலும் தெரிவதில்லையோ?!

No comments:

Post a Comment