Showing posts with label SrC. Show all posts
Showing posts with label SrC. Show all posts

Wednesday, 1 July 2026

பெருசுகள் (senior citizens)


 "பெருசுகள்" என்று அன்போடு அழைக்கப்படும்….… (senior citizens) "சீனியர் சிட்டிசன்களின்" நிம்மதியான வாழ்விற்கு…..

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக்கொடுத்து பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், கீழ்க் கண்ட பத்து விஷயங்களைப் பின்பற்றினால், வாழ்வின் கடைசி பக்கங்களை…….. மிகவும் மகிழ்ச்சியாகவும் சுவாரசியமாகவும், இனிமையாகவும் வாழலாம்!!

1- எந்த ஒரு சூழ் நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசிக் காலத்தில் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள், (உங்கள் சுதந்திரம் அனைத்தும் நிச்சயம் பறி போகும்!!)

2 - உங்கள் பேரக் குழந்தைகள் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை!! என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்!! குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ, மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்!! உங்கள் அறிவுரைகள் மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்.(மதிக்கவும் தெரியாது)

3 - விலகியே இருங்கள். உறவுகள் இனிமையாக இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள்; என்பதை நினைத்து அமைதியாய் இருங்கள்.

4 - பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை - கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகளால் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் மற்றும் உரிமையும் கூட உங்களுக்கு நிச்சயம் இருக்காது!! சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்திய சொத்துக்களை, உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிர வேண்டாம்!! முழுவதும் பகிர்ந்தால் நீங்கள் நிற்க வேண்டியது நடுத் தெருவில்தான், என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!

5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காகப் பாடுபட்டு பல இழப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். ஒருபோதும் அவற்றைச் சொல்லிக் காட்ட வேண்டாம் உங்கள் கடமையைச் செய்தீர்கள் அவ்வளவே!!

6 - கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்து போன தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்!! தேவைப் பட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாய் இருந்து விட்டு வாருங்கள். அங்கேயே அதிகம் தங்கி அவமானப்பட வேண்டாம்.

7 - எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை / கணவனை விட்டுக்கொடுத்துப் பேசாதீர்கள், உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்க் குரல் கொடுங்கள். பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றால்…. கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள், எண்ணெய், பவுடர், சீப்பு, சோப்பு போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்!!

8 - அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றிச் சொல்லிப் பாருங்கள். கட்டாயப்படுத்தி அவமானப்படவேண்டாம். அவர்கள் வாழ்வது நீங்கள் வாழ்ந்ததுப் போன்ற, போராட்ட வாழ்க்கை இல்லை!! நவீன கார்ப்பரேட் வாழ்க்கை!! நீங்கள் 1000 ரூபாயை பெரிதாக நினைத்தவர்கள்!!அவர்கள் லட்சங்களை அனாயாசமாக புரட்டிப் பார்க்கும் நிலையில் இருப்பவர்கள்!! எனவே "சூரியனுக்கே டார்ச் அடித்துப் பார்க்காதீர்கள்"!!

9 - அதிக ஆசை, பாசம் வைத்தால் அது மோசம் ஆகிவிடும்!! எனவே அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்!! எனவே உங்கள் அறிவுரைளை கூடியமட்டிலும் தவிருங்கள்!!

10 - உங்களை விட அறிவிலும் திறமையிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாளாகவே (இருந்துவிடுங்கள்) நடியுங்கள்!! அப்பொழுதுதான் பிழைப்பீர்கள்!!

அதிக அறிவுரைகள் இக்காலச் சந்ததியினருக்கு அறவே பிடிக்காது!! எனவே சுவற்றில் போய் "முட்டிக்கொள்ளும்" செயலில் மட்டும் ஒருபோதும் இறங்காதீர்கள்!!

Sunday, 6 July 2025

மூத்த குடிமக்களுக்கு பத்து கட்டளைகள்

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்

1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்)

2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.

உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது)

3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்.

4- *பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை . கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், உரிமையும் உங்களுக்கு நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம். முழுவதும் பகிர்ந்தால் நீங்கள் நிற்க வேண்டியது நடுத்தெருவில்தான்.*

5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே.

6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம்.

7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க. பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.

8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம்.

அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள்.

9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்கள்.

10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுதுதான் பிழைப்பீர்கள்.

*அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது*. நீங்கள நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குரிகளே. தலையாட்டும் பொம்மைகளே.

Thursday, 6 June 2024

BEST HOBBIES FOR SENIORS


 

SENIOR YEAR BUCKET LIST


 

SCHOOL DAYS REMINISCENT


 

IMPORTANT CHALLENGES FOR SR ADULTS


 

TRIVIA FOR SENIORS


 

FALLS & PREVENTION


 

SENIOR'S FACEBOOK


 

HAPPY PEOPLE


 

ACTIVITIES FOR DEMENTIA


 

SENIORITIS


 

AMAZING JOURNEY


 

SEENAGER


 

SERVICE IDEAS FOR SENIORS


 

OLD IS WHEN.




 

LETTER FROM MOM TO DAUGHTER...


 

MYTH & REALITY


 

Sr ALPHABET


 

LIFE'S LITTLE INSTRUCTIONS