Wednesday, 4 April 2012

BHEL அறிவுத் திருக் கோவில் - 3


அடிக்கல் நாட்டு விழா தகவல் பலகை

திருச்சி கலைக்காவிரி நடன குழுவினருடன்...

தனஆகர்ஷன சங்கல்பம் செய்யும் அன்பர்கள்
கல்வெட்டினைத் திறந்து வைக்கும் WCSC தலைவர் அ/நி SKM மயிலானந்தம் அவர்கள்

மார்ச் 28 2006 மதியம் நண்பர் போன செய்து
"மகரிஷி மறைவு செய்தி சன் டிவியில் flash news ஆக
ஓடிக்கொண்டிருக்கிறது " என்றார். சிறிது நேரத்தில்
நிறைய பேர் போன் செய்து விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்..
சிலர் போனிலேயே அழ ஆரம்பித்து விட்டனர். மற்றவர்களுக்கு
ஆறுதல் சொல்ல முடியாமல் என் குரலும் choke ஆகிவிட்டது..

அறிவுத் திருக்கோவிலின் வரைபடங்கள், அடிக்கல் நாட்டு விழா செய்திகளை
மகரிஷி அவர்களிடம் சொல்லி ஆசி கேட்க திட்டமிட்டிருந்தபோது
மகரிஷியின் மறைவு செய்தி எங்களை மிகவும் பாதித்தது.
நாங்களே எங்களைத் தேற்றிக் கொண்டோம். வான்காந்தமாய் நின்று மகரிஷி வழி நடத்துவார்கள் என்ற உறுதியுடன் செயலாற்ற துவங்கினோம்.

திட்டமிட்டபடி 22 -8 -2006 அன்று உலக சமுதாய சேவா சங்க தலைவர்
அருள்நிதி SKM மயிலானந்தனைக் கொண்டு அடிக்கல் நாட்ட முடிவு செய்தோம். 21 ம் தேதி மாலை BHEL MD ஹாலில் திருச்சி கலைக்காவிரி குழுவினர் கொண்டு மகரிஷி தத்துவங்களை நாட்டிய நிகழ்ச்சியாக நடத்தவும் விரும்பினோம்.

அடிக்கல் நாட்டு விழாவை காலை ஏழரை மணிக்கு வைத்துக் கொள்ள திட்டமிட்டு சுமார் 1500 பேர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு நிலத்தை சீர்செய்து
அமர்வதற்கு புத்தம்புது பாய்கள் வாங்கினோம்.
ஆகஸ்ட் 21 ம் தேதி கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது காற்றுடன் கூடிய மழை அடுத்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை சின்னாபின்னப்
படுத்தி விட்டது.. நிலத்தில ஒரு அடி தண்ணீர் தேங்கி நின்றது.. மேடை, ஷாமியானா எல்லாம் வீணாகி விட்டன.
இரவோடு இரவாக பம்பு செட் வைத்து எல்லா நீரையும் இறைத்து 1500 நாற்காலிகள் வரவழைத்து காலை ஐந்தரை மணிக்கு தன ஆகர்ஷன சங்கல்பத்தை தொடங்கினோம்

1500 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
மன்ற அன்பர் ஒருவரின் லாரி ட்ரைலரை மேடையாக மாற்றி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினோம்.அத்துணை பேருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்திருந்தோம்.

முதல் நாள் நடந்த கலைநிகழ்ச்சியும் , அடிக்கல் நாட்டு விழாவும் மிக, மிக சிறப்பாக நடந்தேறின..

மன்றத் தன்னார்வத் தொண்டர்களின் இரவுபகலான உழைப்பை பாராட்டாதவர்களே இல்லையெனலாம்..


இந்த நிகழ்ச்சி நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற உற்சாகத்தைத் தந்தது..





























Tuesday, 3 April 2012

MIDWEEK INSPIRATION



குறள்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு


இறைஎன்று வைக்கப் படும்

விளக்கம்


எல்லா மேட்டரையும் கரீட்டா செஞ்சு
காப்பாத்தற தலீவன்தான் ஜனங்களுக்கு சாமி மாதிரி..!



10 THOUGHTS ABOUT LEADERSHIP - Jon Gordon

At a time when the world is thinking a lot about leadership I believe it's a great opportunity for each one of us to think about what leadership means to us. Below I’ve shared some of my thoughts on leadership from my book Soup. Whether you are a leader of a business, team, hospital, sports team, classroom, church or home, I hope you'll think about what principles and ideas guide you as a leader and feel free to share.

1. People follow the leader first and the leader's vision second - It doesn't matter if the leader shares a powerful vision, if the leader is not someone who people will follow the vision will never be realized. As a leader, who you are makes a difference. The most important message you can share is yourself.

2. Trust is the force that connects people to the leader and his/her vision - Without trust there is a huge gap between the leader and the vision. Without trust people will stay off the bus. However if people trust the leader they will hop on the bus with the leader and help move the bus forward towards the vision.

3. Leadership is not just about what you do but what you can inspire, encourage and empower others to do.

4. A leader brings out the best within others by sharing the best within themselves.

5. Just because you're driving the bus doesn't mean you have the right to run people over - Abraham Lincoln said "Most anyone can stand adversity, but to test a man's character give him power." The more power you are granted the more it is your responsibility to serve, develop and empower others. When you help them grow they'll help you grow.

6. “Rules without Relationship Leads to Rebellion” - Andy Stanley said this and it's one of my favorite quotes. As a leader you can have all the rules you want but if you don’t invest in your people and develop a relationship with them they will rebel. This applies amazingly to children as well. It's all about relationships.

7. Lead with optimism, enthusiasm and positive energy, guard against pessimism and weed out negativity.

8. Great Leaders know they don't have all the answers - Rather they build a team of people who either know the answers or will find them.

9. Leaders inspire and teach their people to focus on solutions, not complaints. (The No Complaining Rule)

10. Great leaders know that success is a process not a destination - One of my heroes John Wooden, the legendary UCLA basketball coach, never focused on winning. He knew that winning was the by product of great leadership, teamwork, focus, commitment and execution of the fundamentals. As a leader focus on your people and process, not the outcome.






ஜிகர்தண்டா



வெய்யில் கடுமை ஆரம்பிச்சிடுச்சி.. powercut காரணமா கூல் டிரிங்க்ஸ், ஐஸ்க்ரீம் கடைகள்ல
எதுவுமே கூலா கிடைக்கல..அக்கா பானகம் பண்ணி ஃபிரிட்ஜிலே போட்டு வச்சுருக்காங்க..
இந்த வருசம் திருச்சி ஹோட்டல்கள்ல ஜிகர்தண்டா பிரபலமாயிருக்கு..
ஒரு கல்யாண ரிசப்சன்ல கூட ஜிகர்தண்டா கொடுத்தாங்க..

ஜிகர்தண்டாங்கறது நல்லா காச்சுன பால், கடல் பாசி, பாதாம்பிசின், ஜவ்வரிசி கூழ், ரோஸ் சிரப், நன்னாரி சிரப், கொஞ்சம் ஐஸ்க்ரீம் கலந்து தயார் பண்றது.. பாக்க ஃபலூடா மாதிரி இருக்கும்..! மதுரையில ரொம்ப பேமஸ் .. இப்ப எல்லா இடங்களிலும் கிடைக்குது..வயத்துப் பிரச்சனைகளுக்கு நல்லதாம்..!

ஜிகர்தண்டான்னா குளிர்ந்த இதயம்ன்னு அர்த்தமாம்..!

BHEL TRICHY


இந்த ஆண்டும் BHEL திருச்சிக்கு சாதனை ஆண்டு. 14600 கோடி ரூபாய்க்கு
பொருட்கள் உற்பத்தி செய்திருக்கின்றோம். சராசரியாக வேலைநாள் ஒன்றுக்கு
ஐம்பது கோடி ரூபாய் turnover செய்திருக்கின்றோம்.
நான் இங்கு 1977 ல் சேர்ந்தபோது மொத்தம் 20000 க்கு மேல் வேலை செய்தனர். அப்போது
ஆண்டுக்கு 700 கோடிதான் turnover . இன்று 11000 பேர் வேலை செய்து 14600 கோடிக்கு
turnover சாதித்துள்ளோம். powercut போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் நேற்று முடிவுகள்
வெளிவந்தபோது எல்லோருக்கும் மிக உற்சாகம்..நிர்வாகம் எல்லோருக்கும் இனிப்பு பார்சல்
கொடுத்து நன்றி தெரிவித்தது..
இந்த மாபெரும் நிறுவனத்தில் என் பங்கு இன்னும் 22 மாதங்கள்தான்...



Monday, 2 April 2012

நாராயணன் கிருஷ்ணன்

CNN நிறுவனம் உலகத்தின் தலை சிறந்த 10 இளைஞர்கள்ல ஒருத்தரா நம்ம மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனைத்
தேர்ந்தெடுத்து விருது கொடுத்துருக்கு.. அவருக்கு நேத்தி US ல நடந்த பாராட்டு விழாவுல ஸ்ரீராமும் கலந்துகிட்டதாச்
சொன்னான்.

அவரப் பத்தி தெரியாதவங்களுக்காக -

ஏழைகள் பசியால் அவதிப்படுவதை பார்த்து வருத்தமடைந்த மதுரையைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், தினமும் 400 பேருக்கு 3 வேளை உணவளித்து வருகிறார்.இதனால், உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் சிறந்த மனிதர்களுக்கான விருது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி யால் தரப்பட்டிருக்கின்றது

பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார் வள்ளலார். அதேபோல நாராயணனும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு வருகிறார். இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?.

இந்த மனிதர் மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன். நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்தில் செஃப் ஆக வேலை பார்த்து வந்தவர் நாராயணன். ஆனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டு வீதியில் ஆனாதையாய் திரியும் ஏழைகளைப் பார்த்து அதிர்ந்து பெரும் பணத்தைத் தரும் அந்த வேலையை விட்டு விட்டு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார். தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார்சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்திற்கு செஃப் வேலைக்கான வாய்ப்பு நாராயணனுக்கு வந்தது 2002ம் ஆண்டில். இதற்கான நேர்முகத் தேர்வுக்காக சுவிஸ் சென்றார். பின்னர் அதை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக மதுரை திரும்பினார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை ஒரு விநாடி நிறுத்திப் போட்டது. சிக்குப் பிடித்த தலை முடியுடன், உடலில் ஒட்டிக் கிடந்த துணியுடன், நகரக் கூட முடியாத நிலையில், சாப்பிட வழியில்லாமல் தனது மலத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பாவப்பட்ட முதியவர்.இந்தக் காட்சி அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன். முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு நல்ல உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன்.

அன்று தொடங்கியது எனது இந்த பணி.பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்தது போல் எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன் என்றார் நாராயணன்.

நாராயணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை நாராயணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.

அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் நாராயணன்.பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து நாராயணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

இதுவரை கிட்டத்தட்ட 12 லட்சம் சாப்பாடுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் நாராயணன்.

நாராயணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் நாராயணன். நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க.

உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது சிஎன்என் தொலைக்காட்சி. 2010 வருடம் சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர்.நாராயணன்

கிருஷ்ணனின் அட்சயா டிரஸ்ட்டின் இணையதளம். நாராயணனின் சேவையில் பங்கெடுக்க விரும்புவோர் இதை அணுகலாம்.
..http://www.akshayatrust.org/


Sriram with Mr Narayanan Krishnan

The book I lost -


நான் பலமுறை விரும்பிப் படித்த புத்தகம்
BRING OUT THE MAGIC IN YOUR MIND – AL KORAN
எங்களது முதல் பிரதியை இரவல் வாங்கியவர் திருப்பித் தரவில்லை
இரண்டாம் முறை வாங்கியதும்
நண்பரொருவர் எடுத்துச் சென்று திருப்பி கொடுக்கவே இல்லை..
இது மாதிரி இழந்த புத்தகங்கள் ஏராளம்..
எனினும் இந்த புத்தகம் மாலாவுக்கும், எனக்கும் மிகவும் உபயோகமானதாக
இருந்ததாதால் மறுபடியும் வாங்க பலமுறை முயன்றோம்..கிடைக்கவில்லை..
வெகுநாட்களுக்குப் பிறகு publish ஆகியிருக்கும் இதை ஸ்ரீராம் அனுப்பியிருந்தான்.
Thanks a lot Sri..
வாய்ப்புள்ளவர்கள் இந்த புத்தகத்தைப் படிக்க recommend செய்கிறேன்..
Indian edition is now available..

Sunday, 1 April 2012

அக்கா

Kumar receiving Bramhgnaana certificate from Maharishi 2003

Mala akka & Kumar 1994

Pappaakka, Sekar, Thulasiakka, Mala, Sriram & Sundar


என்னோட பெரியக்கா ( பாப்பாக்கா என்கின்ற சிவகாமு ) திருச்சி வந்துருக்காங்க..இன்னிக்கி அவங்களுக்கு 72 வயது முடிஞ்சு 73
ஆரம்பிக்குது..ராமர் கோவிலுக்கு போயிட்டு வந்தோம்..
சேகர் இருக்குற இந்த போட்டோவைப் பாத்தப்புறம் இப்பதைக்கு வேற எழுத முடியல..
சார்லட் குமாருக்கும் இன்னிக்கி பிறந்தநாள்..
பிறந்த நாள் காணும் இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!



57 years back - Pappaakka & JP

Edited to add Kumar photos