Saturday, 8 September 2012

SATURN ( சனி )

மறுபடியும்  சனி  தரிசனம் 

சனி  

சனி கிரகம் சூரியனைச் சுற்றி ஆறாவது வட்டப் பாதையில் 88 கோடி மைல் தொலைவில் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. இந்த கிரகத்தை  62 சந்திரன்கள் சுற்றுகின்றன, சனி வலயத்தினுள்ளே நூற்றுக்கணக்கான குட்டி சந்திரன்கள் இருக்கின்றன. சனி நிலவான டைடன் புதன் கிரகத்தை விட பெரியது

சனிப்பெயர்ச்சி..

மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி
அப்படின்னா என்னங்க..?

நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்

குருப்பெயர்ச்சி !



கல்யாணம் முடிஞ்சு அடுத்தநாள் கோயிலுக்கு போகும்போது மனைவியின் காலில் முள் குத்தி விடவே கணவன் திட்டினான்..."சே..சனியன் பிடிச்ச முள்ளு..."


ஆனா 10 வருஷத்துக்கு பிறகு அதே கோயிலுக்கு போகும்போது மனைவியின் காலில் அதேமாதிரி முள் குத்தி விடவே கணவன் திட்டினான்..."சனியனே....கீழ பார்த்து வரக்கூடாதா...? முள்ளு கிடக்கிறது தெரியாதா..? ...!

ஏங்கிப்போன மனைவி "என்னங்க..?" என்று  கேட்க கோயில் பூசாரி சொன்னாராம்..இது தான்...சனிப்பெயர்ச்சி !




Friday, 7 September 2012

தெரியாத செய்தி - 1

                                   15 ரூபாய் நோட்டு  

தமிழ்நாட்டில் 15 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது தெரியுமா?

1843 ஜூலை மாதம் முதல் தேதியில் அன்றைய சென்னை மாகாண அரசு சென்னை வங்கி யைத் தொடங்கியது. அதே போல் வங்காள வங்கி கல்கத்தாவிலும், பம்பாய் வங்கி பம்பாய் நகரத்-திலும் தொடங்கப்பட்டன. மூன்று வங்கிகளுக்கும் அன்றைய முதலீடு 30 லட்சம் ரூபாக்கள் மட்டுமே! பிரிட்டிஷ் அரசு வங்கிகள் 1806 ஆம் ஆண்டிலிருந்துதான் இந்தியாவில் செயல்-பட்டன. இதற்கு மாற்றாகத்தான் மூன்று வங்கி-களும் தொடங்கப்பட்டன. இவை தொடங்கப்-பட்டதும் முந்தைய வங்கிகள் மூடப்பட்டு-விட்டன. அந்தக் காலத்தில் நாள் ஒன்றுக்கு, இந்த வங்கிகளில் 23 லட்சம் ரூபா வரை வணிகம் (TRANSACTIONS) நடந்துள்ளன.
.
சென்னை வங்கியின் சார்பாக வெளியிடப்-பட்டதுதான் 15 ரூபா நோட்டு. 1817 இல் இருந்து 1827 வரை சென்னை மாகாண ஆளுநராக இருந்தவர் சர். தாமஸ் மன்றோ. சேணமே இல்லாத குதிரையில் ஏறி அவர் அமர்ந்-திருக்-கும் தோற்றச் சிலை. சென்னை, தீவுத்-திடலில் இன்றும் நாம் பார்க்கிறோம். சென்னை நகரின் சின்னம் என்றே கூறத்தக்க வகையில் உள்ள சிலை அது. அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது குதிரை மேல் அமர்ந்த நிலை படம் பொறித்து 15 ரூபா நோட்டுகளை வங்கி வெளி-யிட்டது. தமிழ், தெலுகு, உருது மற்றும் இங்கி-லீஷ் ஆகிய மொழிகளில் 15 எண் நான்கு மூலைகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.

15 ரூபாய் நோட்டு 

Bank of Madras 1843
Now

வெள்ளி ( VENUS )


வெள்ளி

சூரியனைச் சுற்றி இரண்டாவது வட்டப் பாதையில் 6 கோடி மைல் தொலைவில் வலம் வருவது சுக்கிரன் எனும் வெள்ளி கிரகம். வீனஸ் என்ற ரோமானிய அழகு, காதல் தேவதையின் பெயரும் இதற்கு உண்டு.

இது சூரியனைச் சுற்ற 225 நாட்கள் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 256 நாட்கள் எடுத்தக் கொள்கின்றது.

அதாவது வெள்ளி கிரகத்தில் நாள் என்பது வருடத்தைவிட பெரியது!  


இந்த கிரகத்தில் நாம் வசித்தால் சூரியன் மேற்கு திசையில் உதிப்பதைக் காணலாம்.ஒரு நாள் முடிவதற்குள் நமக்கு ஒரு வயது கூடுதலாகியிருக்கும்!






பூமிக்கு மிக அருகில் இருக்கும் இந்த கிரகத்தை விடிவெள்ளியாகவும், மாலை நட்சத்திரமாகவும் காண்கின்றோம். இந்த கிரகத்திலிருந்து வெளிப்படும் காந்தக் கதிர்கள்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றக் காரணமாயிருந்தன என்கின்றார்கள்.

Thursday, 6 September 2012

Nicknames



Nick Names of the countries 

1.    The Great White North - Canada
2.    Hellas - Greece
3.    Holly Land - Israel
4.    Land of the rising sun - Japan
5.    The Emerald Isle - Ireland
6.    India’s teardrop - Sri Lanka
7.    Land of the Indus Valley Civilization - Pakistan
8.    Land of the Huns - Hungary
9.    Rainbow nation - South Africa
10.    Holland - etherlands
11.    The Cradle of Civilization - Egypt
12.    The Jewel in the Crown - India
13.    The Red Dragon - China
14.    Lusitania - Portugal
15.    Kiwiland - New Zealand
16.    Anatolia - Turkey
17.    The Boot - Italy
18.    Emerald of the equator - Indonesia
19.    The White Rus - Belarus
20.    Uncle Sam - USA
21.    Abyssinia - Ethiopia
22.    Land of Chocolate and Cuckoo Clocks - Switzerland
23.    Pearl of the Orient Seas - Philippines
24.    Mesopotamia - Iraq
25.    The Gift of the Nile - Egypt
26.    Land of the upright men - Burkina Faso
27.    Bread asket of Europe - Ukraine
28.    Pearl of the India Ocean - Sri Lanka
29.    Home of the Brave - USA
30.    The Sleeping Giant - China
31.    The Lucky Country - Australia
32.    The Armpit of Africa - Cameroon
33.    Land of Mary Waters - Guyana
34.    The Lungs of the world - Indonesia
35.    Land of saint and scholars - Ireland
36.    The country on the sunny side of the Alps - Slovenia
37.    Land of poets - Chile
38.    The Land of smiles - Thailand
39.    An island surrounded by land - Paraguay
40.    The Subcontinent - India
41.    Land of the blue sky - Mongolia
42.    The Deed Heart of Africa - Chad
43.    The Emerald Isle - Ireland
44.    Albion - United Kingdom
45.    Land of Milk and Money - Switzerland
46.    The Kingdom in the sky - Lesotho
47.    God’s Own Country - New Zealand
48.    Land of the thunder dragon - Bhutan
49.    The Mother Land - Ethiopia
50.    Lechia - Poland


ஒருவர் : உங்க பேரு என்ன சார் ?

மற்றவர் :


  • சின்ன வயசுல 'பாலன்'
  • பாக்கெட் மணி கிடைக்க ஆரம்பிச்சப்ப 'தன'பாலன்
  • தெத்துப்பல்லு வந்தப்ப தன'பல்லன்'
  • ஒல்லியா இருந்தப்ப தனபா'லீன்' (lean)


  • சின்ன சந்துல குடியிருந்தப்ப தனபா'லேன்' (lane )
  • தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்தப்ப த'நெப்போலியன்'
  • போலியோ விழிப்புணர்வு சங்க உறுப்பினரா இருந்தப்ப தன'போலியோ'ன்.
  • பாலிதீன் கம்பெனில வேலை செஞ்சப்ப தன'பாலிதீன்'
  • சர்கஸ்ல ரிங் மாஸ்டரா இருந்தப்ப தனபா'லயன்' (lion )
  • இப்ப பால் வியாபாரம் செய்யுறதால தன'பால்'
ராமன் எத்தனை ராமனடி....

எனக்குத் தெரிந்த சில 'ராமன்'களின்  செல்லப் பெயர்கள்  -

  • ஒலிம்பிக் பலராமன்
  • பதராமன்
  • NTராமன் ( NTR )
  • CVராமன் ( CVR )
  • SSராமன்  ( SSR )

ஒலிம்பிக் பலராமன் - கிட்டத்தட்ட ஐம்பது வருசத்துக்கு முன் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை சினிமா தியேட்டர்களில் நியூஸ் ரீலில் காட்டினார்கள். அதில் முதன்முறையாக ஓட்டப்பந்தயங்கள் " slowmotion " முறையில் காட்டப்பட்டன. அதைப் பார்த்ததிலிருந்து நமது ராமன் நடக்கும்போதெல்லாம் கைகளை ஸ்லோ மோஷனில்  அசைத்து நடந்ததால் அவருக்கு 'ஒலிம்பிக்'  பட்டம் கிடைத்தது.

பதராமன் - பேசும்போதெல்லாம் "பதறாம..., பதறாம.." என்ற வார்த்தைகளை பயன்படுத்தி  மற்றவர்களை நிதானப் படுத்தியதில் கிடைத்த பட்டம் 


நொறுக்குத் தீனி ராமன் ( Norukkuth Theeni Raman  NTR )
தயிர்வடை ராமன் ( Curd Vadai Raman CVR )
சர் சுந்தர ராமன் ( ரசம்,மோர் சாப்பிடும்போது சர்புர்ன்னு சவுண்ட் கொடுத்ததினால் சர் பட்டம் - SSR - இவர் எங்க ஆபீசில் இருந்தவர்) 

JUPITER ( வியாழன் )

குரு பார்வை கோடி நன்மை.



சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோள் வியாழன் எனும் ஜுபிடர். சூரியனிலிருந்து சுமார் 48  கோடி மைல் தொலைவில் தன்னைத்தானே 8 மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றிக்கொண்டு சூரியனை 12  ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றிவரும் பிரமாண்ட கிரகம். 

குருவாய் அருளிய இறைமொழிகள்  




Wednesday, 5 September 2012

பிறந்தநாள் அஞ்சலி

அம்மாவுக்கும், சேகருக்கும் இன்று பிறந்த தினம். இருவருக்கும் ஒரே நட்சத்திரமும் கூட..

இன்று இவர்கள் நம்முடன் இல்லையே என்ற ஏக்கம், சோகம் மனதைப் பிழிகின்றது..

இன்றைக்கு இவ்வளவுதான்...

வாழ்க அம்மா புகழ்!
வாழ்க சேகர் புகழ்!
ஞானியார் இல்லத்தில் அம்மாவுடன் 

சந்திர சேகர் 1960-2009 

புதன்

புதன் 

புதன் கிரகம் சூரியனை முதல் வட்டப் பாதையில் மூன்று கோடி மைல்கள் தொலைவில் சுற்றி வருகிறது. ஒரு சுற்று முடிக்க 88 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால் சூரியனின் பிரகாசத்தில் புதன் எளிதில் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. 

அதிகாலை நேரங்களில் அல்லது மாலை நேரங்களில் புலப்படலாம்.
அதனால்தான் பொன் கிடைத்தாலும்  புதன் கிடைப்பது அரிது என்கிறார்கள். 

பொன் என்பது பொன்னிற கதிர்களை வீசும் குரு கிரகத்தைக் குறிக்கும் .
குரு  கிரகத்தை எளிதில் காணலாம்.

To all my teachers -