பிள்ளையார் சதுர்த்தி வருதுன்னாலே அம்மா எவ்வளவு மரக்காலுக்கு கொழுக்கட்டைன்னு ப்ளான் பண்ணி வெல்லப்பூரணம், உப்புப்பூரணம் எல்லாம் தயார் பண்ணி வச்சுடுவாங்க. சதுர்த்தி அன்னிக்கி விடிகாலையிலே கொழுக்கட்டை பண்ண ஆரம்பிச்சா சாயந்திரம் வரைக்கும் செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. மதிய நேரத்துல
வடை, சுண்டல், பாயசம் இதெல்லாம் வேற செஞ்சு அப்புறம் தெரு பிள்ளையார், தெற்கு தெரு பிள்ளையார், பெரியதெரு பிள்ளையார், முனிசிபாலிட்டி பிள்ளையார், ஆடிய பிள்ளையார் கோவிலுக்கெல்லாம் போய் படைச்சுட்டு வீட்ல இருக்குற பிள்ளையாருக்கெல்லாம் படைச்சப்புறம்தான் கொழுக்கட்டை சாப்பிட முடியும்.
முனிசிபாலிட்டி பிள்ளையார் அப்ப ஒரு சின்ன கொட்டகையில் இருந்தது. விளக்கேத்தி சூடம் எத்தறத்துக்குள்ள பத்து எறும்பாவது கடிச்சிடும்!
முனிசிபாலிட்டி பிள்ளையார் அப்ப ஒரு சின்ன கொட்டகையில் இருந்தது. விளக்கேத்தி சூடம் எத்தறத்துக்குள்ள பத்து எறும்பாவது கடிச்சிடும்!
மழைக்காலத்துல அக்கரையில இருந்து வர்ற ஸ்கூல் பசங்க புள்ளையாரு நெத்தி வரைக்கும் தண்ணி வந்துடிச்சி..ஒலகம் அழியப்போவுதுன்னு பயப்படுவாங்க..
அம்மா விதவிதமான கொழுக்கட்டை பண்ணுவாங்க.. பிள்ளையார் மாதிரியே மாவுல பண்ணி அதுக்கு மூஞ்சூறு வாகனமும் கொழுக்கட்டையில பண்ணுவாங்க..அப்புறம் பலபேர் வீட்டிலேருந்து கொழுக்கட்டை வரும்..அவங்களுக்கு நம்ம வீட்டு கொழுக்கட்டை வச்சு அனுப்பணும்..
அப்பா பல ஊர் கோவில்களுக்குப் போய் யானை தரிசனம் பண்ணிட்டு வருவாங்க..
சதுர்த்தி அன்னிக்கி காலையில வாசல்ல களிமண் பிள்ளையார் வித்துக்கிட்டு போவாங்க..பல சைஸுல சின்னதா, பெரிசா, விதவிதமான பிள்ளையார் வாங்கலாம்.
ரொம்ப பெரிய சைஸ் பிள்ளையார் முக்கால் ரூபாதான்! களிமண் பிள்ளையாரை பயபக்தியோட ஒரு கோலம் போட்ட பலகையில் வைத்து அருகம்புல் மாலை, எருக்கம்மாலை எல்லாம்போட்டு ஒரு சின்ன குடை பிடித்து சாமி ரூம்ல வச்சு பூஜை செய்யணும். பிள்ளையாருக்குப் பிடிச்ச கரும்பு, கொய்யாப்பழம், நாகப்பழம், விளாம்பழம், பொறி,
கடலை போன்றவைகளையும் பூஜையில வைக்கணும். நெறையபேரு அடுத்த நாளே பிள்ளையாரை காவிரியிலேயோ அல்லது வீட்டு கிணத்துலேயோ போட்டுடுவாங்க. நம்மவீட்டு பிள்ளையார் மாத்திரம் எப்பவும் பூஜைரூமிலேயே இருக்கும்..1968 வருஷம் நான் SSLC பரிட்சையில ஸ்கூல் ஃபஸ்ட் வந்தாலும் என்னால எந்த காலேஜிலேயும் சேர முடியல..காரணம் under age ! டைப்ரைட்டிங் ஷார்ட்ஹேண்ட் கத்துக்கிட்டுருந்தப்ப பிள்ளையார் சதுர்த்தி வந்துச்சி..துளசியக்கா கல்யாணமாகி சிதம்பரத்துல இருந்தாங்க.அம்மா எங்கிட்ட அக்காவுக்கு கொழுக்கட்டை
கொடுத்திட்டு வர சிதம்பரம் அனுப்பினாங்க..அந்த வருஷம் இஞ்சினீரிங், பாலிடெக்னிக் காலேஜ்ல அட்மிசன் சரியா போகுல.. அத்தானோட அண்ணன் பையன் இருபது வயசுல பாலிடெக்னிக் சேந்திருந்தாரு..அத்தான் எனக்காக பாலிடெக்னிக் ப்ரின்சிபாலைப் பாத்துப் பேசி என்னை முதல் வருஷம் ( Pre Technical Course ) சேத்து விட்டாங்க.. நான் சேந்த அன்னிக்கி முதல் டெர்ம் பரிட்சை ஆரம்பிச்சிருந்தது.. அத்தான் எனக்கு Maths , Physics கத்துக் கொடுத்து, தெரிஞ்ச லெக்சரர்கிட்ட
எல்லாம் என்னை அனுப்பி வச்சு என்னை பிரமாதமா தயார் பண்ணுனாங்க..
அந்த வருஷம் PTC யில ஸ்டேட் ஃபஸ்ட ராங்க் வாங்கினேன். அப்புறம் BE
சேந்தது தனிக் கதை..!
1968 ம் ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி என் லைப்ல ஒரு டேர்னிங் பாய்ண்ட் கொடுத்தது என்னால எப்பவும் மறக்க முடியாத ஒன்று!
![]() |
எனக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அத்தான் - அக்காவுடன்
|






