Tuesday, 12 July 2016

சினிமா வாரம்s



முழுதாக மூவி பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தியேட்டரில் சென்று பார்த்த கடைசி படம் ' தேவர் மகன் '.

வந்ததிலிருந்து  தினம்  ஒரு படம் என்ற வகையில் பார்த்த படங்கள் -

1. தோழா
2. உன் சமையலறையில்
3. வேலையில்லா பட்டதாரி
4. வாகை சூட வா
5. சூது கவ்வும்
6. சரோஜா
7. அரண்மனை
8. சதுரங்க வேட்டை
9.  It's a mad, mad, mad, mad world
10. இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் 
11. கேடி பில்லா கில்லாடி ரங்கா 
12. 36 வயதினிலே 

Monday, 11 July 2016

சுதந்திர தின விழா

@ Newyork

@ Washington D C


ஜூலை 4ம் தேதி இந்நாட்டின் 240 வது  சுதந்திர தினம் மிக சிறப்பாக கொண்டாடப் பட்டது. Fire works  நேரில் பார்க்க முடியாமல் மழை வந்து விட்டது.
TV யில் பார்த்து ரசித்தோம்.

இந்த ஆண்டு fire works க்காக  எல்லா நகரங்களுக்கும் சேர்த்து 800 மில்லியன் டாலர்  செலவிடப்பட்டதாக படித்தேன்.

இரவு வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள்  நிகழ்த்திய வர்ண கோலங்கள் பலவேறு மலரும் நினைவுகளை எழுப்பி மகிழ்சியில் ஆழ்த்தியது. இயற்கை நிகழ்த்திய Fire works....! 


Friday, 8 July 2016

அப்பா - 103 வது பிறந்த தினம்!

பெல் மன்ற துவக்க விழாவின்போது ( 33  வருடம் முன்னால்  - மஹரிஷி மற்றும் அப்பாவுடன் )




அன்புள்ள  அப்பா 
இன்று உங்களுக்கு 103 வது  பிறந்த தினம்!
நீங்கள் எங்களை ஒவ்வொரு கணமும் 
வான் காந்தமாய் நின்று வழிநடத்துவதை 
உணர்கின்றோம்.!

நீங்கள் வழிகாட்டிய பாதையிலே
எங்களால் முடிந்த அளவுக்கு சமுதாய தொண்டினை 
செய்து வருகின்றோம்.



உங்களின் பிரார்த்தனைகளும்,
பிரதிபலன் எதிர்பாராமல் செய்த தொண்டுகளும்தான்
எங்களை நன்றாக வைத்திருக்கின்றன் என்பதை
உணர்ந்து எங்களை சமுதாயத்திற்கு
அர்பணித்துக் கொள்கின்றோம்.

வாழ்க உங்கள் புகழ்!

Wednesday, 6 July 2016

உழவர் சந்தை







3ம் தேதி ஞாயிறு  காலை  இங்குள்ள உழவர் சந்தை ( Farmers  Market ) சென்று
fresh  காய்கள், பழங்கள் வாங்கி வந்தோம்.

பக்கத்திலிருந்த IKEA furniture department சென்று பார்வையிட்டோம்.

Italian  Pizzaa  சாப்பிட்டு லன்ச் முடித்தோம்.

ஸ்ரீராம் கார் டயர் ஆணி குத்தி பங்ச்சர் ஆனதால் வேறு எங்கும் செல்லவில்லை.




Tuesday, 5 July 2016

MURUGAN TEMPLE & SIVA VISHNU TEMPLE OF NORTH AMERICA

ஸ்ரீராம் பிறந்தநாள் அன்று தாத்தா ( மாலா அப்பா ) வேண்டுகோள்படி இங்குள்ள முருகன் கோவிலுக்குச் சென்றோம். ஸ்ரீராம் இருப்பிடத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தூரம்.

வருகின்ற ஜுலை 10ம் தேதி கோவில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடப்பதால் நிறைய தமிழ் குடும்பங்களைப் பார்க்கமுடிந்தது.

யாகசாலை ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தன்னார்வத் தொண்டர்கள் வேலைகள் செய்து கொண்டிருந்தனர்.

கும்பாபிஷேகத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைத்தார்கள்.

அங்கிருந்து சிவா - விஷ்ணு கோவிலுக்குச் சென்றோம். முருகன் கோவிலுக்கு சமீபத்திலே இக்கோவில் உள்ளது.




கும்பாபிஷேக  அழைப்பு 

ராஜகோபுரம்  முன் 

யாகசாலை  கூடாரம் 

தயாராகிவரும்   ராஜகோபுரம் 


சிவா - விஷ்ணு  ஆலயம் 

இந்த கோவிலில் எல்லா கடவுள் சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் சென்ற சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தினர். மதியம் லஞ்ச் இங்கேயே  முடித்தோம் ( வடை, புளியோதரை, தயிர் சாதம், ETC. )

Monday, 4 July 2016

அக அழகு


மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கம், நடத்தை மற்றும் பண்பாட்டு கல்வியினை படங்கள், கதைகள், video  clippings மூலம் எளிதில் சொல்லிக் கொடுக்க நடந்த பயிற்சி பட்டறையில்  அக அழகு பற்றி சென்ற ஆண்டு  ஆழியாறில் மாலா நடத்திய வகுப்பில் சொல்லப்பட்ட கதை...

கதை கேட்ட மாணவர்கள் " அக அழகு " பற்றி பகிர்ந்து கொண்ட, விவாதித்த பல விஷயங்கள்தான் இப்பயிற்சியின் வெற்றி..!


Saturday, 2 July 2016

HAPPY BIRTHDAY SRIRAM!

Atlast we made it to be with Sriram on his birthday ( after a long gap ).

பிறந்தநாள் காணும் ஸ்ரீராமுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்!



To see the old posts, click http://malajps.blogspot.com/2012/07/happy-birthday-sriram.html, here & here