Wednesday, 13 September 2017

மனைவி நல வேட்பு நாள்


மனைவி  நல வேட்பு நாள்  

இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை! 

ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த    ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி. 

உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம், என தனித்­த­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர். சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள். குடும்­பத்­துக்­காக தன்னையே அர்ப்­ப­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்ல வேண்­டாமா? ஓவ்­வொரு ஆகஸ்ட் 30 ஆம் தேதி    ‘ மனைவி நல வேட்பு நாள்’ உல­கெங்­கு­முள்ள மன­வ­­ளக்­கலை அன்­பர்­களால் உற்­சா­க­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. 

பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­வ­டைந்­த­தாக சரித்­திரம் இல்லை. எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­ய­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும். 

மனை­வியர் தின­மான இந்­நன்­னாளில்* பெற்­றோரை, பிறந்த ஊரை,.உற­வு­களை பிரிந்து, உங்­க­ளுக்கு தொண்­டாற்றி, இனி­மை­யாக, இன்­ப­மாக உங்­க­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­ப­ணித்து வாழும் அன்­புக்கும், பாசத்­துக்கும் உரித்­து­டைய மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்து, வாழ்த்தி உங்­களின் மாசற்ற அன்­பினால் அவர்­களை நனைத்­தி­டுங்கள். 

பெல் அறிவுத் திருக்கோவிலில் வரும்  *17-9-2017 ஞாயிறு அன்று காலை 9-30 மணி அளவில் மனைவி நல வேட்பு நாள்  கொண்டாடப்படுகின்றது. தாங்கள் தம்பதி சமேதராக வந்திருந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க 
அன்புடன் அழைக்கின்றோம்.
வாழ்க வளமுடன்! 

பெல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை , திருச்சி -19

11 ஆண்டுகளுக்கு முன் கொழும்புவில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் மாலா ஆற்றிய உரை கேட்க இங்கே சொடுக்கவும்.


Sunday, 3 September 2017

ஏழாம் சுவை - நகைச்சுவை . 1

ஏழாம் சுவை - நகைச்சுவை 

              - அறு(சு)வையானந்தா 


இன்றைய அவசர உலகின் டென்ஷன்களைக் குறைப்பதற்காக நம் வாசகர்கள் 'அருட்குரலில்' சிரித்து மகிழ ஒரு பக்கம் ஒதுக்குங்கள் என கேட்கின்றார்கள். இவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் ஸ்ரீஸ்ரீ...ஸ்ரீ சுவாமி அறு(சு)வையானந்தாஜி அவர்களை அணுகினோம்.

நகைச்சுவையில் நவரசங்களை கலந்து ஏழாம் சுவையாய் வழங்கும் சுவாமிஜி அவர்கள் நம் 'அருட்குரலில்' மாதாமாதம் அருட்சிரிப்புகளை அள்ளி வழங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள்.

இந்த மாதம் அவர் அருளிய முன்னுரை -

இனிய வாசக பெருமக்களே !  வாழ்க வளமுடன்!
உலகத்திலேயே ரொம்ப  அழகானது எது தெரியுமா? மலர்ந்த முகங்களை, புன்னகை பூத்த முகங்களைப் பார்ப்பதுதான்..அதைவிட அழகானது அந்த புன்னகைகளுக்கு காரணமாக நீங்கள் விளங்குவதுதான்..!

'தொண்டாற்றி இன்பம் காண்போம்' என்று முடிகின்றது நம் இறைவணக்க பாடல்.

ஒருத்தனை சிரிக்க வச்சுட்டா அதுவும்  ஒரு தொண்டுதான்!

திருவள்ளுவர் கூட

நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பாற் பட்டன்று இருள்

 - அதாவது  சிரிக்கத் தெரியாதவனுக்கு பகலும் இருளாகவே இருக்கும் என்கிறார்.

அப்பரடிகள் கூட

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

சிவபெருமானின் குமிண் நகை காணப்பெறுவதாக இருந்தால் மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்கின்றார்.

குமிண் சிரிப்பு அல்லது குமிண் நகை என்பது உதட்டுக்குள் சிரிக்கும் புன்னகை ஆகும்

ஓஷோ சொல்லுறாரு –

"மனுசன் இப்ப ரொம்ப, ரொம்ப சீரியஸ் ஆயிட்டான்..அவனுக்கு சிரிக்கிறது அப்டீன்னு என்னான்னே தெரியல...ஒரு மணி நேரம் தியானம் செய்றதக் காட்டிலும் ஒரு செகண்ட் உங்ககிட்டேருந்து வரக்கூடிய குபீர்/ வெடி சிரிப்பு ரொம்ப எபக்டிவ்... ஞானங்கிறதே ஒரு பிரபஞ்ச சிரிப்புதான்..!”

எனவே இந்த பகுதியில் உங்களைச் சிரிக்க வைக்கக்கூடிய சம்பவங்கள், துணுக்குகள், கடி, மொக்கை மற்றும்  வாழ்க்கையின் வேடிக்கையான முரண்பாடுகள், அபத்தங்கள் போன்ற பலவும் தர இருக்கின்றேன் 


நீங்கள் அனைவரும் புன்னகை மன்னர்களாகத் திகழ ஆசிகள் வழங்க ஆசைப் பட்டாலும் புன்னகை மன்னன் என்ற வார்த்தைகள்  " இளிச்சவாயன்" என்ற அர்த்தத்திலும்  வழக்கத்தில் இருப்பதால் நீங்கள் என்றும் குமிண் சிரிப்போடு,
குதூகலத்தோடு திகழ என் ஆசிகள் உரித்தாகுக!

அடுத்த மாதம் சந்திப்போம் , வாழ்க வளமுடன்!

Friday, 14 July 2017

நவீன உலகம்


  
காலை எழுந்தவுடன் whats app
வாலைக் குமரியுடன் face book

சாலை முழுவதும் Mobile Talk
மாலை முடியும் வரை Chit Chat 
மாலை முடிந்ததும் Work Hour Start

பொய்யுரை எழுத Status Reports

மெய்யுரை சொல்ல Company Reports
பொய்யை மெய்யாக்க Status Call 
மெய்யை உறுதியாக்க Conference Call 
பொய்யும் மெய்யும் கலந்த Live Call

டாகுமென்ட் எழுத Copy & Paste

ப்ரோக்ராம் எழுத Cut & Paste
மறந்ததைப் படிக்க E-Learning 
படிக்காமல் உறங்க Audio-Learning 
படித்ததை நினைவூட்ட Google Search

கூடிப் பேச Conference Hall

கூடாமல் பேச Coffee Break 
காதல் செய்ய Live Chat 
குறட்டை விட Training Session
அரட்டை அடிக்க Lunch Break

ஓசியில் திங்க Team Lunch

தின்றதைச் செரிக்க Gym Sport
ஊரைச் சுற்ற Team Golf
ஆடிப் பாட Team Outing 
ஓடி விளையாட Paint Ball

பொழுது போக்க Birthday Party

இதையும் மீறி Friday Pub
அதையும் மீறி Weekend Party
ஆயிரம் இருந்தும் NO PEACE OF MIND


Monday, 10 July 2017

10-07-1958

1958ல்  நடந்த எங்கள்  வீட்டுத் திருமணங்களின்போது தந்தை பெரியார் அவர்கள் எனது தந்தைக்கு அனுப்பிய வாழ்த்து அட்டை கீழே -



10-7-1958 அன்று எனது பெரியண்ணன், பெரியக்கா இவர்களுக்கு வைதீக முறைப்படி திருமணமும், எனது சித்தப்பா இருவருக்கு சுயமரியாதை திருமணமும் ( ஈ.வி.கே.சம்பத் தலைமையில் ) மொத்தம் நான்கு திருமணங்களை எனது தந்தையார் 59 ஆண்டுகளுக்கு முன் நடத்தினார்கள்.

அந்த காலத்தில் நடந்த புதுமை!