Showing posts with label Wife's day. Show all posts
Showing posts with label Wife's day. Show all posts

Sunday, 30 August 2026

மனைவி நல வேட்பு விழா




இன்று ஆகஸ்ட் 30, மனைவி நல வேட்பு விழா

மாலாவும், நானும் சென்ற ஆண்டுவரை மொத்தம் 36 தடவைகள் இந்த விழாவினை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் நடத்தியிருக்கின்றோம்.

சென்ற ஆண்டு மனைவி நல வேட்பு உறுதிமொழி சொல்லி அவள் தலையில் ரோஜா மலரை சூட்டும்போது மாலா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதாள். அவளால் அதற்கு பிறகு பேச முடியவில்லை. நானே நிகழ்ச்சியை முடித்து விட்டு பிறகு வீடு திரும்பினோம். வீட்டிற்கு வந்தபிறகு ஏன் இப்படி அழுதாய் எனக்கேட்டதற்கு " நான் உங்களுக்கு ஏதுமே செய்வதில்லை. என்னை ஓர் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டீர்கள். இவ்வளவிற்கும் நான் எப்படி நன்றி சொல்லி உங்களை பார்த்துக்கொள்ள போகிறேன் " என்றாள். "நாம் நடத்தப்போகும் நூறாவது விழா அன்று இதுபற்றி பேசலாம் " என்று கூறி அவளை சமாதானப்படுத்தினேன்.ஆனால் அவள் உள்ளுணர்விற்கு ஏதோ தெரிந்துள்ளது - இதுதான் கடைசி முறை என்று.

இன்று என்னை விழா நடத்த கூப்பிட்டனர் - "நான் வரவில்லை. மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டால் விழா வீணாகிவிடும் " எனக் கூறிவிட்டேன். எனினும் அறிவுத்திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில் பார்வையாளனாக கலந்துகொண்டேன்.

ன்
இன்று முகூர்த்தநாள் என்பதால் நிறைய அன்பர்களுக்கு இன்று நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய் விட்டது. சிறப்பு தம்பதியர்களில் இரு தம்பதியர் வர முடியவில்லை. விழா தொகுப்பாளர் என்னையே விழாவின் முக்கிய நிகழ்வுகளான காந்த பரிமாற்ற தவம் மற்றும் மலர், கனி பரிமாற்றத்தையும் நடத்தும்படி வேண்டினர். என்னுள் இருந்து என்னை இயக்கிக்கொண்டிருக்கும் மாலாதான் நிகழ்வினை நடத்தினாள் என்பதை நான் முற்றிலும் உணர்ந்தேன்.
மிகவும உணர்ச்சி வசப்பட்டதால் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது. எப்படியோ விழாவின் முக்கிய பகுதியை சிறப்பாக நடத்தினேன்.என்னால் முழுவதுமாக பேசமுடியவில்லை. இரண்டு நிமிடம் உணர்ச்சி பெருக்கோடு பேச முடியாமல் நின்றபோது நண்பர் ஓடிவந்து அடுத்த நிகழ்வு பற்றி அறிவித்தார்.

பிறகு சிறப்பு தம்பதியராக வந்திருந்த முனைவர் சிவ. மல்லிகா அவர்கள் மனைவியின் மாண்பு என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்.
இவர் மாலாவின் தோழியாக திகழ்ந்தவர். திருமந்திரத்தையும், வேதாத்திரியத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சியில் திருமந்திர வகுப்புகளை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். On line வகுப்புகளும் நடத்துகின்றார்.

இவருடைய கணவர் முனைவர் சந்தானதுரை அவர்கள் திருச்சி BHEL நிறுவனத்தில் பொது மேலாளராக கணிணி துறையினை சிறப்பாக நடத்தி ஓய்வு பெற்றவர்.

இன்றைய நிகழ்வில் எடுத்த போட்டோக்கள் -












Thursday, 31 August 2023

Wednesday, 30 August 2023

WIFE APPRECIATION DAY






 

Husband And Wife Jokes

Marriage is a relationship in which one person is always right, and the other is a husband.

When did you get to know your spouse? Sadly, a week or two after the wedding.

Husband: I had a terrible row with my wife last night. But she crawled to me on her knees in the end.Friend: Wow, that’s really impressive! What did she say?!Husband: “Come out from under that sofa, you coward!”e other day, my wife asked me to pass her the lipstick, but I accidentally passed her a glue stick. She still isn’t talking to me now.

Tuesday, 29 August 2023

மனைவி நல வேட்பு விழா

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்   30ம்  தேதி மனைவி நல வேட்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. சில இடங்களில்  சில நாட்கள் முன்னதாகவோ அல்லது  30ம் தேதிக்குப் பிறகோ பல காரணங்களை முன்னிட்டு 
நடத்தப படுகின்றது.
கடந்த ஞாயிறு ( 27-08-23 )  திருச்சி நகர் அறிவுத் திருக்கோயிலில் இவ்விழா நடைபெற்றது. நானும், மாலாவும் நடத்தி வைத்தோம். அப்போது எடுத்த போட்டோக்கள் சில கீழே -






நமது வேதாத்திரி நகரில் நாளை ( 30-08-23 )  மாலை இந்த விழா நடைபெறுகின்றது. அதற்கான அழைப்பிதழ் கீழே -
 

Wednesday, 13 September 2017

மனைவி நல வேட்பு நாள்


மனைவி  நல வேட்பு நாள்  

இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை

ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த    மனைவி நல வேட்பு நாள் என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி

உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம், என தனித்­­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர். சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள். குடும்­பத்­துக்­காக தன்னையே அர்ப்­­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்ல வேண்­டாமா? ஓவ்­வொரு ஆகஸ்ட் 30 ஆம் தேதி    மனைவி நல வேட்பு நாள் உல­கெங்­கு­முள்ள மன­­­ளக்­கலை அன்­பர்­களால் உற்­சா­­மாகக் கொண்­டா­டப்­­டு­கி­றது

பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­­டைந்­­தாக சரித்­திரம் இல்லை. எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­­ளுக்கு மதிப்­­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும்

மனை­வியர் தின­மான இந்­நன்­னாளில்* பெற்­றோரை, பிறந்த ஊரை,.உற­வு­களை பிரிந்து, உங்­­ளுக்கு தொண்­டாற்றி, இனி­மை­யாக, இன்­­மாக உங்­­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­­ணித்து வாழும் அன்­புக்கும், பாசத்­துக்கும் உரித்­து­டைய மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்து, வாழ்த்தி உங்­களின் மாசற்ற அன்­பினால் அவர்­களை நனைத்­தி­டுங்கள்

பெல் அறிவுத் திருக்கோவிலில் வரும்  *17-9-2017 ஞாயிறு அன்று காலை 9-30 மணி அளவில் மனைவி நல வேட்பு நாள்  கொண்டாடப்படுகின்றதுதாங்கள் தம்பதி சமேதராக வந்திருந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க 
அன்புடன் அழைக்கின்றோம்.
வாழ்க வளமுடன்! 

பெல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை , திருச்சி -19

11 ஆண்டுகளுக்கு முன் கொழும்புவில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் மாலா ஆற்றிய உரை கேட்க இங்கே சொடுக்கவும்.