Wednesday, 9 September 2026

நாளைக்கு மரணம்



நாளைக்கு மரணம் என்று தெரிந்தால் இன்று என்ன செய்ய நினைப்பீர்கள்?

ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்…

இன்று இரவு தூங்கப் போகும்போது,
நாளை காலை உங்களுக்கு இல்லை.. என்று யாராவது சொன்னால்…

முதலில் பயப்படுவோமா?
அழுவோமா?

இல்லை…

அடடா, அப்போ நான் Amazon-ல order பண்ணியது நாளைக்கு வந்தா யார் வாங்குவாங்க? என்று கூட சிலர் யோசிக்கலாம்😂

சரி… உண்மையிலேயே நாளை என் கடைசி நாள் என்று தெரிந்துவிட்டால்….

பெரிய பெரிய சாதனைகள் செய்ய ஓடமாட்டேன்.

இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது… EMI கட்டணுமா வேண்டாமா? என்று கொஞ்ச நேரம் தீவிரமாக யோசிப்பேன்…

பிறகு…

என்னை காயப்படுத்தியவர்களை மன்னிக்க முயற்சிப்பேன்.
நான் காயப்படுத்தியவர்களிடமும் மன்னிப்பு கேட்பேன்.

ஆனால் சிலரிடம் மட்டும்…

சரி மன்னிச்சுட்டேன்… ஆனா நீ செய்தது மட்டும் தப்புதான்…. என்று மனசுக்குள் சொல்லிக்கொள்வேன்😂

என் குடும்பத்தினருடன் மனம் திறந்து பேசுவேன்.

நான் உங்களை நேசிக்கிறேன் என்று சொல்லிவிடுவேன்.

அதோடு…

வீட்டில் எனக்குப் பிடித்த சாப்பாடு எல்லாம் செய்து தரச் சொல்லிவிடுவேன். ஏனென்றால் டயட் நாளைக்கு தேவையில்லை அல்லவா 🤣

பிடித்த பாடலைக் கேட்பேன்.
பிடித்த இடத்திற்குச் செல்வேன்.
மனம் நிறைய சிரிப்பேன்.

முக்கியமாக…

மொபைல் சார்ஜ் 10% இருந்தாலும் சார்ஜர் தேடிப் பதறமாட்டேன்.

ஆனால் எல்லா காமெடியையும் தாண்டி ஒரு உண்மை இருக்கிறது…

நாளைக்கு மரணம் என்று தெரிந்தால்தான் நாம் அன்பை வெளிப்படுத்த நினைக்கிறோம்.

நாளை இல்லை என்று தெரிந்தால்தான், இன்று எவ்வளவு முக்கியம் என்று புரிகிறது.

சொல்ல வேண்டிய அன்பை இன்று சொல்லுங்கள்.
செய்ய வேண்டிய நல்லதை இன்று செய்யுங்கள்.
வாழ வேண்டும் என்று நினைக்கும் வாழ்க்கையை இன்று வாழ ஆரம்பியுங்கள்.

ஏனென்றால்…

மரணம் எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் வாழ்க்கை இப்போது இருக்கிறது என்பது மட்டும் உறுதி.

அதனால் வாழ்க்கையை நாளைக்காக ஒத்திவைக்காதீர்கள்…

நாளை என்ன நடக்கும் என்று தெரியாது… ஆனால் இன்று சிரிக்க ஒரு காரணம் கண்டுபிடிக்கலாம் 😍

No comments:

Post a Comment