Wednesday, 9 September 2026

அருவருப்பான உண்மைகள்

 


வாழ்க்கையின் சில அருவருப்பான உண்மைகள் யாவை?

  1. ஒரு ஜீவன் கூட உண்மையாக உங்களுக்கு உதவவும் முடியாது வதைக்கவும் முடியாது! நீங்கள் - நீங்கள் மட்டுமே முக்கியமாக மனம் ..உங்கள் வாழ்க்கைக்கு முழு பொறுப்பு!
  2. உங்கள் செல்வம், பதவி, ஆள் பலம் குடும்ப பலம் வைத்து நீங்கள் இந்த உலகத்தில் மதிக்க படுவீர்கள் சாகும் வரையில்... இது எதுவுமே கூட வராது! அதுக்காக மட்டும் வாழணுமா ?? யோசி
  3. சாவின் விளிம்பை சந்தித்திருந்தால் இறைவனை ஒரு விநாடியாவது “இன்னிக்கு தேங்க்ஸ் ! “ நன்றி சொல்வீர்கள்
  4. கண் பிரச்சனை வந்தால் முன்பை விட உலகம் மிக அழகாக தெரியும், எல்லா ஏனோ தானோ விஷயங்களும் கரெக்ட்டா தெரியும்; perfection is a myth! Imperfections are also beautiful❤️🙏
  5. எதை எவ்வளவு முறை எங்கெங்கு தேடினாலும், அது கிடைத்தாலும் ...கொஞ்ச நாள் கழித்து வேறு ஒரு தேடலே வாழ்வின் இயல்பு! ஆகையால் எதுவும் யாரும் எந்த இடமும் மிக பெரியதும் இல்லை மிக சிறியதும் இல்லை! உணர்வை தாண்டி அறிவை தாண்டி அமைதி கிடைக்க மிக மிக மிக உயர்ந்ததை மட்டும் யோசிக்க வேண்டும்!
  6. வறுமை, பதவி விலகல், விபத்து, நோய், திடீர் திருப்பங்கள், துரோகம் இப்படி எதை எல்லாம் பார்த்து அஞ்சுகிறோமோ அது தான் உண்மையை கன்னத்தில் அறைந்து காட்டும்! எதெல்லாம் தோற்றமளித்து நல்லது செய்து கொண்டிருக்கும் மாயைகள் உண்மைகளை அழகாக மறைக்கும்! நிரந்தரம் நீ மட்டும் தான் உனக்கு என்று ஒன்னும் இல்லாமல் இறைவன் முன் நிற்பதே உண்மை!
  7. மனிதர்கள் வாழ்வின் காலச்சக்கரத்தின் பருவ நிலை, seasons இதனை விட மிக வேகமாக மாற கூடியவர்கள்! மனித குணம் மாறி கொண்டே இருக்கும்..! கண்டிப்பாக! தன்னை மட்டும் நம்புவது சிறந்தது
  8. உன் முகத்தின் முன் திடீர்னு மிகவும் புகழ்பவன் உனக்கு பின் மோசடி செய்துவிட்டு இதனை சந்தேகம் வரக்கூடாது என்று இப்படி பேசுகிறான் என்பதை முதலில் உணர்ந்துகொள்
  9. அவரவர் தன் பூர்வ அத்தனை வாசனைகள் சேர்ந்த மனிதர்! அவரவர் ஆன்ம நிலை முற்றிலும் வேறு.. எனக்கு புரிகிறது அவனுக்கு புரியல; எனக்கு கருணை இருக்கு அவனுக்கு இல்லை, எனக்கு மக்கு மாதிரி ஜடம் பிரைன் அவனுக்கு அப்படிப்பட்ட ஆற்றல்.. இப்படி பட்ட துரோகம் செய்தானே ?? இதெல்லாம் அடுத்த முறை தோன்றும் பொழுது .. ஆன்ம உணர்தலில் அவரவர் நிலைப்பாடு அவரவர் வாசனை அவரவர் குணத்தின் மாற்றத்தில் மிக பெரிய வேறுபாடு இருப்பது தெரிந்தால் ......பிழைத்தோம்!
  10. காரணமே இல்லாமல் உனக்கு கெடுதிகள் நினைப்பவர், செய்பவர், சொல்பவர்களால் உன் பாவம் போகும்! அதை கடந்து செல் ...

No comments:

Post a Comment