1.விலையுயர்ந்த செல்போன் வாங்காதீர்கள். நீங்கள் EMI செலுத்தி முடிப்பதற்கு முன்பே புதிய பதிப்பு(மாடல்) வெளிவரும்.
2. விலை உயர்ந்த கைப்பை அல்லது மணிபர்ஸ் வாங்காதீர்கள். போலிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன. நன்கு பழகிய கண்களுக்கு மட்டுமே அது உண்மையானது(ஒரிஜினல்) என்று தெரியும்.
3. விலையுயர்ந்த காலணிகளை வாங்காதீர்கள். ஒவ்வொரு அடியிலும் அதை பாதுகாக்கும் முயற்சியில் வாத்து போல நீங்கள் நடக்க முடியாது.
4. விலை உயர்ந்த ஆடைகளை வாங்காதீர்கள். உங்கள் கழுத்தின் பின்னால் உள்ள சிறிய TAG ஐ காட்டிக்கொண்டு நீங்கள் நடக்கப் போவதில்லை.
5. விலை உயர்ந்த கடிகாரத்தை வாங்காதீர்கள். அழகிய விண்டேஜ் வாட்ச் ஆன்லைனில் குறைந்த விலைக்கு இருக்கிறது, ஒரிஜினல் போலவே போலிகள் பல உள்ளன. எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் ஒரே நேரத்தைத் தான் காட்டும்.
6. விலை உயர்ந்த உள்ளாடைகளை வாங்காதீர்கள். உங்களுக்கு வசதியாக இருந்தால் போதுமானது. விக்டோரியாஸ் சீக்ரெட் உள்ளாடைகளை மட்டும் அணிந்து பொது இடங்களில் நடக்க அனுமதி இல்லை.
7. விலை உயர்ந்த கார்களை வாங்காதீர்கள். அது ஓடும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அதன் மதிப்பு குறைகிறது. உங்கள் 12 லட்சம் SUV பின்னாளில் 50Kக்கு மட்டுமே விற்கப்படும்.
8. பெரிய வீடு வாங்க வேண்டாம். அதிக இடைவெளி குடும்ப உறுப்பினர்களிடையே இடைவெளியை உருவாக்குகிறது. நெருக்கமான மகிழ்ச்சியான வீடு என்பது அளவில் இல்லை, நம் மனதில் உள்ளது.
9. எப்பொழுதும், எதிலும் விலையில் கவனம் செலுத்துங்கள். ஒன்றின் விலையில் உங்களால் இரண்டை வாங்க முடியும். இல்லையேல் இல்லாதவர்க்கு ஒன்றை கொடுத்து உதவ முடியும்.
10. பிராண்டை சுமப்பது உங்கள் வேலை அல்ல. உங்கள் தேவையும், உங்கள் பொருளாதாரமுமே உங்கள் பிராண்டை நிர்ணயிக்க வேண்டும்.
பிறரை பார்த்து, பிறர் சொல்வதை கேட்டு செலவு செய்யாதீர்கள். நாளைய உங்கள் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் யோசித்து செலவழியுங்கள்.
கடனில்லா வாழ்வே பெருவாழ்வு.
No comments:
Post a Comment